காங்கிரஸ் கட்சியினரின் தொடரும் நாடகம்

சில தினங்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் பிராணாப் முகர்ஜீ சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அமைச்சர்கள் அனைவரும் செலவினைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்றும், விமான பயணத்தின் போது பொருளாதார வகுப்பில் பயணம் செயுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன் உதாரணமாக அவர் தில்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு விமானத்தில் செல்லும் போது பொருளாதார வகுப்பில் பயணம் செய்தார்.

இதைத் தொடர்ந்து நம்ம இந்தியாவின் அன்னை (?) சோனியா காந்தி தில்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் செல்லும் போது பொருளாதார வகுப்பில் பயணம் செய்தார்.
சென்றார்.

இதற்கு அடுத்த படியாக நம்ம அறியாமைப் புகழ்......ராகுல் காந்தியும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

சதாப்தி எக்ஸ்பிரெஸ் ரெயிலில் டில்லியிலிருந்து லூதியானவிற்கு சென்றார். ரெயிலில் இவருக்கு என்று பிரேத்யேகமாக தயார் செய்யப்பட உணவு வகைகள் பரிமாற்றப்பட்டன.

இப்படிப்பட்ட நாடகங்கள் எத்தனை நாளுக்குத் தொடரும்.

உண்மையில் இப்படி பயணம் செய்தால் மட்டும் நிதி நிலை சரியாகிவிடுமா ?

நிதி நிலைமையை கட்டுப் படுத்த வேறு வழிகளே இல்லையா ?

வேறு வழிகள் தெரியவில்லை என்றால் பல பொருளாதார வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்கலாமே.

பல பிரச்சனைகளுக்கு நடுவே வாழும் நம்மை திசை திருப்ப இப்படி ஒரு நாடகமா?

சுதந்திரனத்தையே சுதந்திரமாக கொண்டாட முடியாத ஒரு கேவலமான நிலையில் நம் நாடு இருக்கும் சூழ்நிலையில், சிக்கனம் என்ற பெயரில் இப்படி பட்ட பயணங்கள் அவசியம்தானா?.

இப்படித்தான் நம்ம ஊரு ப்ரெண்டு ஒருத்தன் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இடத்துக்கு போக கிளம்பினான்.

அந்த இடத்துக்கு பஸ்ல போனா 3.50 பைசா டிக்கெட் செலவாகும்.

நம்மாளு காச மிச்சம் பண்றேன்னு நெனப்புல அந்த இடத்துக்கு நடந்தே போயிருக்கான்.

ரெண்டு கிலோ மீட்டர் வெயில்ல நடந்து வந்ததுல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, உடையெல்லாம் அழுக்காக, காலெல்லாம் புழுதியாக, வேர்த்து வடிய, தாகத்தோடு போய் சேந்திருக்கான்.

போனவன் நேரா ஒரு பெட்டிகடைக்கு போய் தாகம் தீர்க்க ஒரு தண்ணி பாக்கெட்டும், ஒரு லெமன் சர்பத்தும் குடிச்சானாம்.

ஒரு தண்ணி பாக்கேட்டுகும், லெமன் சர்பத்துகும் சேத்து ஏழு ரூபாய் கொடுத்துட்டு வந்திருக்கான்.

மூணு ரூபாய் மிச்சம் பிடிக்க நெனச்சு எழு ரூபாய் செலவு ஆயிடுச்சேன்னு எங்கள்ட்ட சொல்லி வருத்தப் பட்டான்.

நம்ம நண்பர் நம்மகிட்ட இத சொல்லும் போது இன்னொன்னையும் சொல்லிட்டு போனார்.

மாப்ள எதுக்கு செலவு பண்ணனுமோ அதுக்கு செலவு பண்ணித்தான் ஆகணும். கஞ்சத்தனப் பட்டோ, காச மிச்சம் பன்றோம்னு நெனைச்சா அதுவே எக்கு தப்பா ஆயிடும், அது தப்பு மாப்ளன்னு சொன்னான்.

Posted by போவாஸ் | at 2:19 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails