என்ன செய்ய போகிறார்கள், நம் தலை(வலி)வர்கள்....?

என்ன செய்ய போகிறார்கள்...நம் தலை(வலி)வர்கள்....?
கடந்த சில நாட்களாக நம் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது, கடலில், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கப்பட்டு,உதைபட்டு,பொருட்களையும்,மீன்களையும் பறிகொடுத்துவிட்டு, உயிரை கையில் பிடித்து வந்து சேர்ந்தனர்.இது நித்தமும் தொடரும் சம்பவம் என்ற ரீதியில் இப்பொழுது போய்க்கண்டிருக்கிறது.

தமிழக அரசும், முதல்வரும் தெளிவான, நிலையான முடிவினை எடுக்க முயலாமல், தன் மக்களின் கண்ணீரை துடைக்க மத்திய அரசிடம் அழுத்தமான முறையில் முறையிடாமல் மந்தமான முறையில் கடிதம் எழுதுவதும், புறா காலில் கட்டி கடிதம் அனுப்புவதுமாய் இருக்கிறார்.
மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு சாதகமான செயலுமில்லை. இதுவரையில்லை. இதை பற்றி அனைத்து கட்சியினரும் பாகுபாடில்லாமல் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஏன்...தமிழக காங்கிரஸ் கூட கண்டனங்களைத் தெரிவித்தது.இதுக்கு எல்லாம் ஒரு படி மேல போயி நம்ம டிரமாகாந்து sorry..விஜயகாந்து தில்லியில போயி உண்ணாவிரதம் இருந்தார்.

இப்போ என்னடான்னா...நேத்தைக்கு,தென் மாநிலங்களுக்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் ஒரு பேட்டியில என்ன சொல்லிருக்காருனா...


1. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.
2. தமிழ்நாடு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடந்த மாதம் 9ம் தேதி என்னைச் சந்தித்த போது, "இலங்கை கடற்பகுதிக்குள் தடைகளை மீறி உட்புகும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை; கைது செய்வதுமில்லை' என்று தெரிவித்துள்ளனர்.
3. மீனவர்கள் மீது யார் தாக்குதல் நடத்துகின்றனர் என்பதை, பத்திரிகையாளர்கள் தான் ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.
கொஞ்சமும் வாய் கூசாம இப்படி மூன்று கருத்தை(பொய்ய) சொல்லியிருக்காரு.

பாமக,வைகோ பரவாயில்லை...மீனவப் பிரச்னையை அறிக்கையோடு நிறுத்திக் கொண்டனர்.
பெரிய அளவில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தவில்லை.
திமுகவோ தனது எம்பிக்களை பிரதமரை சந்திக்க செய்து மனு கொடுக்க செய்தது.
தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
பிரதமரும் பதில் கடிதம் எழுதி ஆவன செய்வோம் என்று சொன்னார்.
நம்ம டிராமாகாந்து தில்லியிலேயே போயி உண்ணாவிரதம் இருந்து ஓவர் சீனெல்லாம் போட்டார்.
மத்திய மாநில அரசிடமிருந்து, இந்த பிரச்சனையைக் குறித்து ஒரு, நிரந்தர தீர்வு காணும் அறிக்கையாவது வரும்னு எதிர்பாத்தா..இலங்கைத் துணைத் தூதர் வந்து இப்படி பேசியிருக்காரு.

இப்போ இவுங்கெல்லாம் என்ன செய்ய போகிறார்கள், என்ன பதில் சொல்லப்போறாங்க. குறிப்பா..திமுகவும், விஜயகாந்தும்.
தமிழக பத்திரிகை நாளிதழ்களில் பக்கம் பக்கமாய் செய்திகள் வந்தது. டிவி மீடியாக்களிலும் காலை முதல் இரவு வரை அரைத்த மாவை அரைப்பதுபோல இது குறித்த செய்திகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக ஒளிபரப்பப் பட்டது,NDTVயில் கூட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதும்,அவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றதையும் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பினர்.

இப்போ இந்த மீடியாக்களில்....ஏதேனும் ஒரு மீடியாவாவது தைரியத்துடன் வந்து இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களையும்,அவர்கள் நம் மீனவ மக்களுக்கு செய்யும் அட்டுழியங்கள் அக்கிரமங்களை படம் பிடித்து காட்டும் அளவுக்கு புலனாய்வு செய்து, ஆதாரத்துடன் நிரூபிக்குமா?.

இந்த வடிவேல் கிருஷ்ணமூர்த்தி சொல்றது உண்மைனா...நம்மாளுங்க எல்லாம் முட்டாளுங்களா?.
இல்லைனா இப்படி சொல்லி நம்மை முட்டாளா ஆக்குராங்களா?

Posted by போவாஸ் | at 1:56 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails