கேட்குறவன் கேனப்பயலாக இருந்தா, நான்தான் வருங்கால அமெரிக்க ஜனாதிபதின்னு சொல்விங்க போல.

தினமலர் இணையதளத்தில் வந்த செய்தி : 


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சேலத்தில் நேற்று கூறியதாவது:தமிழக முதல்வர் கருணாநிதி, "இலங்கைக்கு தி.மு.க., கட்சி சார்பில் எம்.பி.,க்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்' என்று கூறுகிறார்.பிற கட்சியில் இருப்பவர்களிடம் பணம் இல்லையா, அனைத்து கட்சியில் இருப்பவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அப்போது தான் இலங்கையில் நடக்கும் உண்மை நிலை தெரிய வரும்.
ஐ.நா., மூலம் அங்கு சென்ற அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்களாலேயே, அங்கு நடக்கும் உண்மை நிலையை கண்டறிய முடியவில்லை. அவர்கள் என்ன செய்யப் போகின்றனர்.இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கையில் வாழ வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கினால், ராஜபக்ஷேவின் நடவடிக்கைக்கு நாமே துணை நிற்பது போல் ஆகிவிடும்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

விஜயகாந்த் அவர்களே, உங்கள் அறிக்கையின் மூலம் ஒரு உணமைதத்தேரிகிறது. உங்களிடமும் பணம் இருக்கிறது என்று. அப்போ தில் இருந்தா, இலங்கைத் தமிழர்களின் மீது உண்மையான அக்கறை இருந்தால், திமுக சார்பில் சென்ற குழுவைப் போல நீங்களும் பிற எதிர் கட்சிகளும் சேர்ந்து இலங்கைக்கு போய் உங்களது வீர தீர செயல்களை காட்டி, உண்மை நிலையைத் தெரிந்து, அறிந்து, படம் பிடித்து கட்டலாமே, அறிக்கைகளையும், செய்திகளையும், உண்மைகளையும் வெளியிடலாமே. யார் உங்களைத் தடுத்தார்கள்.

இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்தியா ஆயுதங்களைக் கொடுத்து உதவியது. அது குறித்து அப்போது என்ன கூறினீர்?..நினைவில்லையா?... "பொதுவாக போர் நடக்கும் போது ஆயுதம் கொடுப்பதும் விற்பதும் நடைமுறையில் இருப்பது தானே" என்று கூறிய நீங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக அழுவதா?.. நீலிக் கண்ணீர் எதற்கு ?. 

உண்மையில் தமிழ் இன உணர்வு இருந்திருந்தால் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.க்கள் குழு சந்தித்த போது உடன் சென்றிருக்க வேண்டும். கூட்டணி பேரம் பேசுவதற்கு மட்டும் அனைவரையும் சென்று பார்க்கத் தெரிகிறது, தூது விடத் தெரிகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காகப் போகத் தெரியவில்லையா?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இலங்கை இலங்கைப் பிரச்சனை பெரிதாக தலை தூக்கிய போது, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திக் கூட்டினார். அந்த கூட்டத்திற்கு சென்றீரா ?. பேசினீரா ? கோரிக்கைகளை முன் வைத்தீரா ?. ஒன்றுமில்லையே ?. கூட்டத்தையே புறக்கணித்தீர். ஏன் ?.

" ஐ.நா., மூலம் அங்கு சென்ற அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்களாலேயே, அங்கு நடக்கும் உண்மை நிலையை கண்டறிய முடியவில்லை. அவர்கள் என்ன செய்யப் போகின்றனர் " - என்று கேட்கும் நீங்கள் என்ன செய்து கிழித்து விட்டீர் ?. அல்லது ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன், சீமான் எல்லோரும் என்ன செய்து விட்டார்கள். பொதுக்கூட்டங்களையும், போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், அறிக்கைகளையும் மீறி என்ன செய்து விட்டார்கள். சொல்லுங்கள். 

இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தாலும்...உங்களால் அறிக்கைகளையும், கண்டனங்களையும் தவிர வேறேதும் செய்ய முடியாது. 

எல்லோரும் சேர்ந்து ''மனித சங்கிலி'' என்றாலும் புறக்கணிப்பு, ஆளும் கட்சி எம்பிக்கள் டெல்லி போனால் ''கபட நாடகம்'', ஆளுங்கட்சி கூட்டணி இலங்கை சென்றால் ''என்னை ஏன் கூப்பிடலை'' என்று கூப்பாடு. வைகோ போன்றோர் இப்போது கூட்டியுள்ள சென்னை கூட்டம கூட புறக்கணிப்பு. பிரச்சனை தீரும் வரை கருப்பு பட்டை அணிவதாக சபதம் போட்டீர்கள், தற்போது டெல்லியில் போராட்டம் என்றீர்கள் மற்ற கட்சியினர் இதை எல்லாம் தவறு , கபடநாடகம் என்றார்களா?  

இலங்கைத் தமிழர்கள் நலனுக்காகவும், சீரான, செழிப்பான மறு வாழ்வுக்காகவும் உருப்படியாக ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள், செய்யுங்கள். இல்லையா...போய் நடிக்கிற வழியப் பாருங்கள்...உங்க படம் ஓடுதோ இல்லையோ...ஒரு நூறு பேருக்கு வேலை கிடைச்ச மாதிரி இருக்கும்.

ஜெயலலிதா முதல்வராகவும், வைகோ பிரதமராகவும், ராமதாஸ் ஜனாதிபதியாகவும் இருந்தாலும்...இலங்கைப் பிரச்சனையில் இன்றுள்ள நிலையில் ஒன்றும் செய்யமுடியாது. பிரச்சனை அந்த அளவுக்கு கை மீறி சென்று விட்டது. 

அடுத்தவர் செய்வது சரி தப்பு என்று மட்டும் கருத்து சொல்ல நீங்கள் எங்களைபோல் குடிமகனாக இருந்தாலே போதும்.  

இனியும் வாய்ச்சவடால்களையும், வெட்டிப் பேச்சுக்களையும், கலைஞரை திட்டி தீர்ப்பதையும் விட்டு விட்டு ரூம் போட்டு உருப்படியாக உக்காந்து யோசியுங்கள். உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் உருப்படியாக ஏதும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் இருங்கள். 

கேட்குறவன் கேனப்பயலாக இருந்தால், நான்தான் வருங்கால அமெரிக்க ஜனாதிபதின்னு சொல்விங்க போல.

Posted by போவாஸ் | at 12:28 PM

1 கருத்துக்கள்:

r.selvakkumar said...

நியாயமான கேள்விகள்

Post a Comment

Related Posts with Thumbnails