அரசு நடத்திய பேஷன் ஷோ : அசத்திய மும்பை மாடல்கள்


ரசு நடத்திய பேஷன் ஷோ : அசத்திய மும்பை மாடல்கள்

நாட்டிலேயே முதன் முறையாக அரசு சார்பில் கைத்தறி விற்பனையை அதிகரிக்க மும்பை மாடல்களை அழைத்து திண்டுக்கல்லில் பேஷன் ஷோ நடத்தப்பட்டது.
வசதியான மக்களிடம் மட்டும் காணப்படும் கைத்தறி ஆர்வம் நடுத்தர மற்றும் சாதாரண மக்களிடம் இல்லை. அனைத்து தரப்பினரும் கைத்தறி ஆடைகளை அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் முதன் முறையாக திண்டுக்கல்லில் மும்பை மாடல்களை அழைத்து பேஷன் ஷோ நடத்தினர்.

சின்னாளபட்டி கைத்தறி ஆடைகள், கோராபட்டு ஆடைகள், பல்வேறு சங்கங்களின் தயாரிப்புகளான பலரக கைத்தறி சேலைகள், சுடிதார்களை அணிந்து கொண்டு மும்பை மாடல்கள் மேடையில் வலம் வந்தனர்.

பல்வேறு மாநில உடை அலங்காரங்களில் இதே ஆடைகளை அணிந்து மாடல்கள் அணிவகுப்பு நடத்தினர். ஒவ்வொரு முறையும் மாடல்கள் உடையணிந்து வலம் வரும் போது, அறிவிப்பாளர் அதன் விலைகளை தெரிவித்து, அனைத்து கைத்தறி ரக விற்பனை மையங்களிலும் இந்த ரகங்கள் கிடைக்கும் என அறிவித்தனர். போர்வைகள், படுக்கை விரிப்புகள், கதவு, ஜன்னல் விரிப்புகளையும் மாடல்கள் காண்பித்தனர்.

திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார் பேசும்போது: தென் மாநில, மாவட்ட மக்கள் பயன்படுத்தினால் அவர்களின் அந்தஸ்த்து உயருவதோடு, கைத்தறி நெசவாளர்களின் அந்தஸ்தும் உயரும். எனவே தீபாவளி பண்டிகையினை "கைத்தறி ஆடைகளுடன் கொண்டாட' வேண்டும் என்றார்.

இது போன்ற பேஷன் ஷோக்கள் மூலம் உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள், விற்பனை அதிகரிக்கிறது, விளம்பரமும் கிடைக்கிறது,  கலாச்சாரத்தை காப்பதற்கு ஒரு வழியாய் இருக்கிறது.
சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களிலும் நடை பெற வேண்டும். தமிழ் பொண்ணுங்களும் அழகுதான் என்பதை பேஷன் ஷோக்களை நடத்தும் அரசு மறந்துவிடக் கூடாது. அடுத்த முறையாவது தமிழ் பொண்ணுங்களுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
வாழ்த்துக்கள்.

Posted by போவாஸ் | at 11:16 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails