கடவுளை காப்பாற்றும் காவல் துறை




செஞ்சி அருகில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் 17ஆம் தேதி நடைபெற்றது. காலையில் அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் நடைபெற்றதாம். அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை ஊஞ்சல் மண்டபத்துக்கு நள்ளிரவு 12 மணிக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு ஊஞ்சலில் அம்மனை வைத்து உற்சவம் நடத்தினர். இரவு 1 மணிவரை பக்திப் பாடல்களும், தாலாட்டுப் பாடல்களும் பாடப்பட்டன.
இந்த ஊஞ்சல் உற்சவத்தின்போது அம்மன் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted by போவாஸ் | at 11:19 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails