ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள காலியிடங்களுக்கான நாளை தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், வேற்று மாநிலத்தவரை மும்பையில் பணியமர்த்தக் கூடாது என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால், வங்கி வட்டாரம் மற்றும் தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில், சுமார் 20,000 கிளார்க் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் மட்டும், 2,980 பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மகாராஷ்டிராவில் உள்ள இப்பணியிடங்களுக்கு அதே மாநிலத்தவரைத் தவிர வேறு நபர்களை நியமிக்கக் கூடாது என வலியுறுத்தி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் சிவசேனா கட்சியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் 1500 இடங்களுக்கு தேர்வு நாளை நடைபெறுகிறது. தேர்வு நடைபெற உள்ள நிலையில், வங்கிக்கு ராஜ் தாக்கரே சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா பாரத ஸ்டேட் வங்கிக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், வேற்று மாநிலத்தவரை மும்பை வங்கியில் பணியமர்த்தக் கூடாது என அதில் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

இந்திய நாட்டின் ஒற்றுமையை குலைக்கும், பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியிருக்கும் ராஜ் தாகரே மீது தடா, போடா போன்ற சட்டங்கள் பாயாதா ? இந்திய நாட்டு இறையாண்மைக்கு எதிரான பேச்சல்லவா ? என்ன செய்யப் போகிறது மத்திய அரசு ?

Posted by போவாஸ் | at 5:31 PM

1 கருத்துக்கள்:

Kannan said...

அடேங்கப்பா

Post a Comment

Related Posts with Thumbnails