கடவுள் இருக்கும் இடமெல்லாம் காமலீலைக் கூடாரமாக மாறுகிறது


பகுத்தறிவற்ற கும்பலால் கடவுளின் முக்கிய திருத்தலங்கள் என்று போற்றப்படும் இடங்கள் எல்லாம் தற்போது அவை காம லீலை கூடாரங்களாக மாறி வருகின்றன. பகுத்தறிவாளர்களால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வரும் இந்தக் கூற்றை இரு அரசு சாரா நிறுவbjhjkjnனங்களின் ஆய்வு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளன.
புனிதத் தலங்களுக்கு ஆன்மிக யாத்திரை என்ற பெயரில் செல்லும் பக்தர்கள் அங்கு நடத்தும் காமக் களியாட்டங்கள் குறித்து இரு அரசு சாரா நிறுவனங்கள் தேசிய அளவில் சமீபத்தில் ஆய்வு நடத்தின. அதில் குறிப்பாக சிறுவர், சிறுமியர் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளிவந்து உள்ளன.
நாடு முழுவதும் ஆய்வு
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் கிராம நியோஜன் கேந்திரா என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது. சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக திருத்தலங்கள் என நாடு முழுவதும் உள்ள 68 இடங்-களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆன்மிக திருத்தலங்கள் பலவும் காம விளையாட்டு அரங்கங்களாக மாறியிருப்பதை கண்டறிந்துள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஆன்மிகத் தலங்களில் தான் இந்தியா மற்றும் வெளிநாட்டினர் தமது காம விளையாட்டுகளை அதிகமாக நடத்தி வருகின்றனர். இதில் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமின்றி வலுக்கட்டாயமாக சிறுவர், சிறுமியரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பக்தர்கள் என்ற போர்வையில் இந்த ஆபாச அரங்கேற்றத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஆன்மிகத் திருத்தலங்கள்
இந்தியாவில் பாலியல் வேட்கையைத் தணிப்பதற்கான இடமாக வெளிநாட்டினர் தேர்வு செய்துள்ள இடங்கள் ஆன்மிக திருத்தலங்கள் தாம். அந்த அளவுக்கு அங்கு காமக் களியாட்டத் தொழில் கொடிகட்டிப் பறப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், பெங்களூருவில் உள்ள அரசு சாரா அமைப்பு ஒன்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் திருப்பதி, குருவாயூர் மற்றும் பூரி போன்ற ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் பெரும் எண்ணிக்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களின் பாலியல் சுரண்டலிலிருந்து சிறுவர், சிறுமியரைப் பாதுகாப்பது என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் மட்டு-மின்றி இளம் பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது உண்மை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆன்மிகம் என்ற பெயரில் மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் இந்தக் காம லீலைகளைக் கட்டுப்படுத்த போதிய சட்டம் இல்லை என்று அந்த ஆய்வறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை அடுத்து இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான வரைமுறைகளை உருவாக்க மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சார்பில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசு வலியுறுத்தல்
ஆன்மிகம் என்ற பெயரில் நடத்தப்படும் சுற்றுலாக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர், சிறுமியர் இக்கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்கும் விதமாக கடும் சட்டங்களும், காவல்துறை கண்காணிப்பும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுற்றுலாத்துறை வலியுறுத்தி உள்ளது.

Posted by போவாஸ் | at 9:17 PM

1 கருத்துக்கள்:

ரோஸ்விக் said...

ஆன்மீகத் திருத்தலங்களுக்கு போயி எப்படியெல்லாம் கடவுளைத் தேடுராங்கப்பா...அடப் பாவிகளா...!

Post a Comment

Related Posts with Thumbnails