வரதட்சிணை கேட்டதால் மாப்பிள்ளையை ஏற்க மறுத்த மணமகள்
தமிழகப் பகுதியான திருவக்கரையைச் சேர்ந்த தவமணி என்கிற பிரியாவுக்கும் (21), வானூர் அருகேயுள்ள கோரைக்கேணியைச் சேர்ந்த வெங்கடேசன் (25) என்பவருக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூர் பாலமுருகன் திருமண நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பெண் அழைப்பு நடந்தது. இதில் இரு தரப்பினரும் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டனர்.
வெள்ளிக்கிழமை காலையில் மணமேடையில் மணமகள் வந்து அமர்ந்தார். முகூர்த்த நேரம் நெருங்கியும் மாப்பிள்ளை வரவில்லை. பெண் வீட்டார் பதற்றத்துடன் காணப்பட்ட
னர். முகூர்த்த நேரம் முடிய 10 நிமிடங்களுக்கு முன் மாப்பிள்ளை வந்தார். டி.வி., வாஷிங் மெஸின், மிக்சி ஆகியவற்றை சீர் வரிசையாக கொடுத்தால்தான் தாலி கட்டுவேன் என்றார்.
முகூர்த்த நேரம் முடியப் போகிறது. தாலி கட்டுங்கள். பிறகு பார்க்கலாம் என்று எல்லோரும் கூறியும் அவர் கேட்கவில்லை. திருமணம் நின்றது. அங்கிருந்தவர்கள் பஞ்சாயத்து பேசினர். பின்னர் தாலி கட்ட மாப்பிள்ளை ஒப்புக் கொண்டார். ஆனால் மணமகள் பிரியா அந்த மாப்பிள்ளையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அவர் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இருப்பினும் உறவினர்களும், நண்பர்களும் அதே தினத்தில் மணமகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி எடுத்தனர். அப்போது மணமகளின் அத்தை மகனான திண்டிவனம் அருகேயுள்ள பேரடிக்குப்பத்தைச் சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் (25) சம்மதித்தார். இதையடுத்து அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது.
பிரியா கூறுகையில், ""திருமணம் நின்றுபோனால் எங்கள் குடும்ப கெüரவம் என்ன ஆகும் என்று பயந்தேன். என்னுடைய அத்தை மகன் அதைக் காப்பாற்றிவிட்டார். அவருக்கு அன்பான மனைவியாக இருப்பேன். மாப்பிள்ளை வெங்கடேசன் ஏற்கெனவே கேட்ட வரதட்சிணையை எங்கள் வீட்டினர் செய்திருந்தனர். மணமேடையில் கூடுதலாக வரதட்சிணை கேட்டது என் மனதை வேதனைப்படுத்தியது. எங்கள் குடும்பத்தில் 3 பெண்கள். மூத்த மகள் நான்'' என்றார் பிரியா.
புதிய மாப்பிள்ளை விஜயகுமார் கூறுகையில், ""வரதட்சிணை கேட்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கு இந்தத் திருமணம் ஒரு பாடமாக அமையட்டும். என் மனைவியைக் கடைசி வரை காப்பாற்றுவேன். இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. என் மாமா குடும்பத்தின் கெüரவம் பாதிக்கக் கூடாது என்பதற்காக முழு மனதுடன் பிரியாவைத் திருமணம் செய்து கொண்டேன்'' என்றார்.
-------------------------------------------------------
மணமகள் பிரியாவின் தைரியத்தையும், திடமனதையும் பாராட்டியே ஆகவேண்டும்.
பிரியாவிற்கு கை கொடுத்து, குடும்ப கௌரவத்தையும் காத்த புதிய மாப்பிள்ளை விஜயகுமாருக்கும் பாராட்டுக்கள்.
வரதட்சனைப் பிரச்சனையால் கணவனுடன் சேர்ந்து வாழமுடியாமல் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கும், செய்வதறியாது திகைத்த்ப் போய் நிற்கும் பல பெண்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் கொடுக்கும் ஒரு உதாரணச் சம்பவமாக இருக்கும்.
வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கு இது ஒரு படிப்பினை.
மணமக்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
1 கருத்துக்கள்:
great!!
Post a Comment