நதிகள் இணைப்பு திட்டம் கைவி​டப்​ப​டு​கி​றது

கங்கை-​காவிரி இணைப்பு திட்​டம் என்று அழைக்​கப்​ப​டும் தேசிய நதி​களை இணைக்​கும் திட்​டத்​துக்கு 4.4 லட்​சம் கோடி ரூபாய் நிதி தேவைப்​ப​டு​கி​றது என்​ப​தால் அந்த திட்​டம் கைவி​டப்​ப​டு​கி​றது என்று மத்​திய நீர்​வ​ளத் துறை அமைச்​சர் பவன்​கு​மார் பன்​சால் மக்​க​ள​வை​யில் புதன்​கி​ழமை அறி​வித்​தார்.​ அதே சம​யம் ஆந்​தி​ரத்​தில் கோதா​வரி ஆற்​றின் மீது மேற்​கொள்​ளப்​ப​டும் போலா​வ​ரம் பல்​நோக்கு நதி​நீர் திட்​டம் தேசிய திட்​ட​மாக விரைந்து அமல்​ப​டுத்​தப்​ப​டும் என்​றார்.


கங்கை -​ காவிரி இணைப்பு திட்​டம் என்று அழைக்​கப்​பட்ட தேசிய நதி​நீர் இணைப்பு திட்​டம் சாத்​தி​யம் இல்​லா​விட்​டா​லும் வடக்​கில் இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யா​கும் நதி​கள் அவற்​றின் கிளை நதி​கள் ஆகி​ய​வற்றை இணைக்​கும் திட்​டம் தனி​யா​க​வும் தென்​னிந்​திய தீப​கற்​பத்​தில் உரு​வா​கும் நதி​களை இணைக்​கும் திட்​டம் தனி​யா​க​வும் மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றும் அவர் குறிப்​பிட்​டார்.


இத்​த​கைய திட்ட அம​லுக்கு சம்​பந்​தப்​பட்ட மாநி​லங்​க​ளின் முத​ல​மைச்​சர்​களை அழைத்து கூட்​டம் நடத்தி திட்​டங்​கள் ஒருங்​கி​ணைக்​கப்​பட்டு விரை​வு​ப​டுத்​தப்​ப​டும் என்​றார்.


இந்த திட்​டங்​களை நெறிப்​ப​டுத்த நெறி​யா​ளர் பதவி ஏற்​ப​டுத்​தப்​பட வேண்​டும் என்று மக்​க​ள​வை​யில் நதி நீர் இணைப்பு திட்​டம் குறித்த விவா​தத்​தைத் தொடங்​கிய கே.எஸ்.ராவ் ​(காங்​கி​ரஸ்)​ கோரி​யி​ருந்​தார். அதை ஏற்க முடி​யாது என்று அமைச்​சர் பன்​சால் மறுத்​து​விட்​டார். இப்​போ​துள்ள அமைப்​பு​க​ளும் ஏற்​பா​டு​க​ளுமே போதும் என்று கூறி​விட்​டார்.


அடல் பிகாரி வாஜ்​பாய் தலை​மை​யி​லான தேசிய ஜன​நா​யக கூட்​டணி கங்கை -​ காவிரி இணைப்பு திட்​டத்தை அமல்​ப​டுத்த முடிவு செய்​தது. அதற்​காக முன்​னாள் மத்​திய அமைச்​சர் சுரேஷ் பிரபு தலை​மை​யில் உயர்​நிலை பணிக் குழுவை நிய​மித்​தது. அந்​தக் குழு​வும் இதற்​கான ஆரம்​ப​கட்​டப் பணி​க​ளில் இறங்​கி​யது.


இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யாகி வட மாநி​லங்​க​ளில் பாயும் வற்​றாத ஜீவ நதி​க​ளை​யும்,​ தென்​னிந்​திய தீப​கற்​பத்​தில் பாயும் நதி​க​ளை​யும் இணைத்து வறட்சி,​ வெள்​ளம் ஆகிய இரு தேசி​யப் பேர​ழி​வு​க​ளை​யும் ஒரு சேர சமா​ளிக்க இந்த நதி நீர் இணைப்​புத் திட்​டம் உத்​தே​சிக்​கப்​பட்​டது.


இந்த திட்​டத்தை மத்​திய அர​சில் அமைச்​ச​ராக இருந்த டாக்​டர் கே.எல். ராவ் என்​ப​வ​ரும் 50 ஆண்​டு​க​ளுக்கு முன்பே கூறி​யி​ருந்​தார். இதைச் செய்து முடிக்​கும் தொழில்​நுட்ப ஆற்​றல் அப்​போது இந்​திய அர​சி​டம் இல்லை என்​ப​தால் இதை நிறை​வேற்​றத் தயக்​கம் ஏற்​பட்​டது. அப்​போ​தும் நிதி நிலை​மை​யில் பற்​றாக்​கு​றை​தான் நிலவி வந்​தது.


நதி​நீர் இணைப்பு திட்​டத்தை நான் ஆத​ரிக்​க​வில்லை,​ அத​னால் சாத​கங்​க​ளை​விட பாத​கங்​களே அதி​கம் என்று காங்​கி​ரஸ் கட்​சி​யின் இளம் தலை​வ​ரான ராகுல் காந்தி சமீ​பத்​தில் கருத்து தெரி​வித்​தி​ருந்​தார். இதை ஏரா​ள​மா​னோர் கண்​டித்​தி​ருந்​தா​லும் அவர் சொல்​வது யதார்த்​த​மா​னது என்​பதை பலர் வழி​மொ​ழிந்​த​னர்.


நதி​களை இணைப்​ப​தற்கு கோடிக்​க​ணக்​கான ரூபாய் முத​லீடு தேவை என்​ப​து​டன் ஏரா​ள​மான நிலங்​க​ளைக் கைய​கப்​ப​டுத்த வேண்​டி​யி​ருக்​கும். அத்​து​டன் நதி​நீர் இணைப்​புக் கால்​வாய்​களை வெட்ட ஏரா​ள​மான கிரா​மங்​க​ளில் வாழும் மக்​களை அவர்​க​ளு​டைய வசிப்​பி​டங்​களி​லி​ருந்து வெளி​யேற்ற நேரும். விவ​சாய நிலங்​க​ளும் தரிசு நிலங்​க​ளும் இந்த திட்​டத்​துக்​காக ஏரா​ள​மான அள​வில் கைய​கப்​ப​டுத்​தும்​போது அது சமூக,​ பொரு​ளா​தார பிரச்​னை​க​ளைப் புதி​தாக உரு​வாக்​கும். எனவே கோடிக்​க​ணக்​கான பணம் விர​ய​மா​வ​து​டன் சமூ​கத்​தில் அமை​தி​யின்​மை​யும் ஏற்​ப​டும் என்று பலர் எச்​ச​ரித்​த​னர்.


மேலும் நதி​களை அவற்​றின் போக்கி​லி​ருந்து திருப்​பு​வ​தால் அதன் பாச​னப் பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு மர​ப​ணுக்​க​ளில் சிதை​வு​கள் ஏற்​பட்டு உடல் ஊனம் போன்​றவை ஏற்​ப​டு​வ​தா​கக்​கூட சில ஆய்​வு​கள் எச்​ச​ரித்​தன. இந்த நிலை​யில் மத்​திய அர​சின் புதிய முடிவு மீண்​டும் பலத்த சர்ச்​சையை தேசிய அள​வில் ஏற்​ப​டுத்​தும் என்று தெரி​கி​றது.
----------------------------------------------------------------
காங்கிரஸ் கட்சியின் இளவரசன் ராகுல் காந்தி நதிநீர் இணைப்பு சாத்தியமில்லை; அதனால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று திருவாய் மொழிந்தருளியத்தை அடுத்து, நதி நீர் இணைக்கும் இந்தக் கனவுத் திட்டம் 'அம்போ' என்று கைவிடப்படுகிறது.இந்தத் திட்டத்துக்குச் செலவாகும் தொகை மிக அதிகம் என்பதால் திட்டம் கைவிடப்படுகிறதாம் !. 


ஒவ்வொரு அமைச்சரும் ஒரு இடத்திற்கு செல்லும் போது நடக்கும் ஆடம்பர செலவினங்களையும், ஒவ்வொரு நிகல்ழ்ழிகளின் போதும் செயப்படும் ஆடம்பர அலங்கார செலவுகளையும், வீண் ஆடம்பர திட்டங்களிலும், சிலைகள் நிறுவ செலவிடப்படும் பலலட்சம் கோடிகள் செலவாகும்போது, மக்களுக்கான இந்த திட்டத்தை கைவிடவேண்டிய அவசியம் என்ன?. 


பீஹார், மகாராஷ்டிர, ஆந்திரா, கர்நாடாக போன்ற இடங்களில் வரலாறு காணாத மழையினாலும் வெள்ளத்தாலும் நேர்ந்த சேதங்களைக் கண்டும் அமைச்சர்களின் அறிவுக் கண் திறக்கவில்லைஎன்றால் என்ன செய்வது?.


வெள்ளத்தால் சீரழிந்த பகுதிகளைப் புனரமைக்க பலஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. செலவு மட்டுமல்ல, எத்தனை பேர் உயிர், உடைமை, உறவுகளை இழந்து தவிக்கிறார்கள். வறட்சியிலும் இதே நிலைமைதான். இத்தனை துன்பங்களையும் அனுபவித்து, ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரம் கோடி செலவு செய்வதைக் காட்டிலும், ஒரேயொரு முறை சில லட்சம் கோடி செலவு செய்வது புத்திசாலித்தனமில்லையா?


கொட்டும் மழை நீரை முறையாக சேமித்து வைக்கவும் தேவைக்கேற்ற வகையில் அணைகள் இல்லை. நதிகள் இனிப்புமில்லை என்றால் எப்படி?. இனி வருங்காலங்களில் நீராதாரமே இல்லாமல் போய் விடும்.


ஒரே நேரத்தில் இந்த பெரிய திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறையில் கடினமே என்று வைத்துக் கொண்டாலும், சிறிய சிறிய நதிகளை முதலில் இணைத்தாலே மக்கள் மனதில் ஒரு நம்பிக்கை வந்து விடும். மக்களின் ஆதரவும் இருக்கும். அதன் பிறகு பெரிய நதிகளை இணைக்கும் போது அதிக எதிர்ப்பு இருக்காது.


தமிழ்நாட்டில் இருந்து ஒருவரல்ல, இருவரல்ல....நாற்பது பேர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளனர். எதற்கு என்றே தெரியவில்லை?. மத்​திய நீர்​வ​ளத் துறை அமைச்​சர் பவன்​கு​மார் பன்​சால் அவர்கள் நதிநீர் இணைப்பு திட்டம் கைவிடப்படுகிறது என்று கூறும் போது.....திமுகவின் எம்பிகள், கூட்டணி தர்மத்திற்காக கைதட்டி, புண் சிரிப்புடன் வரவேற்று ஆரவாரம் செய்தனரோ ?. பெயருக்கு கூட ஒருவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லையே ?.


மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களுக்காக பாடுபடும் அரசாகத் தெரியவில்லை. மக்களைப் பாடாய்படுத்தும் அரசாகவே தெரிகிறது.


கையாலாகாத காங்கிரஸ் கட்சி என்று பலர் கூறுவது உண்மைதான் போலிருக்கு !.

Posted by போவாஸ் | at 10:19 PM

1 கருத்துக்கள்:

என் நடை பாதையில்(ராம்) said...

இப்படித்தான் இவர்கள் சேது சமுத்திர திட்டத்தையும் கைவிடப் போகிறார்களாம்.

Post a Comment

Related Posts with Thumbnails