ஆட்டம் காணும் ஐயப்பனின் சபரி மலை.
சபரிமலை சன்னிதானம் அருகே நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். வெடிபொருளுடன் வந்த நபர்கள் யார் என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நெருங்குவதால் பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அதிவேக அதிரடிப்படை போலீசார் உள்பட 1,500-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று ஞாயிறு என்பதால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பக்தர்கள் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர்.
இரவு 8 மணி அளவில் சன்னிதானம் அருகே சரங்குத்தி பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நடை சாத்துவதற்குள் தரிசித்துவிட வேண்டும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்தபடி நின்றிருந்தனர். கயிறு கட்டி, பகுதி பகுதியாக பிரித்து பக்தர்களை போலீசார் அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. பக்தர்கள் பதற்றம் அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
சன்னிதானம் எஸ்.பி. சசிக்குமார் தலைமையிலான போலீசார், ஆயுதப்படை மத்திய அதிவேக அதிரடிப்படை, மற்றும் வெடிகுண்டு பிரிவு போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். குண்டு வெடித்த இடத்தில் கிடந்த பொருட்களை சேகரித்தனர்.
காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளை விரட்ட பெரிய பாதையில் பல இடங்களில் வெடி வழிபாடு என்ற பெயரில் வெடிகள் வெடிக்கப்படும். பக்தர்கள் கட்டணம் செலுத்தினால் அவர்களது பெயரை சொல்லி வெடி வழிபாடு நடத்தப்படும். இந்த வெடிகளை பக்தர்களே சிலர் கொண்டு வந்து வெடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பக்தர்கள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் பம்பையில் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. அதை மீறி வெடிபொருளை எப்படி கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவில்லை.
"சரங்குத்தி பகுதியில் நின்றிருந்தபோது 2 பேர் வெடிபொருட்களை வைத்திருந்தது போல தெரிந்தது. அது என்ன என்று அருகே இருந்தவர்கள் விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே வெடித்துவிட்டது" என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.
அதிர்ஷ்டவசமாக குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிபொருளுடன் நடமாடியதாக பக்தர்கள் கூறும் 2 நபர்கள் யார், தீவிரவாதிகளா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. பம்பை மற்றும் சிறிய பாதை உள்பட சபரிமலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் இருமுடி கட்டுகள், பை உள்பட அனைத்துப் பொருட்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
----------------------------------------------------------------------------------
யப்பப்பா ஐயப்பா....என்னப்பா இது சோதனை...
உன் இருப்பிடத்தையும், உன்னை நாடி, தேடி வரும் பக்தர்களையே காக்க முடியலையே...
உன் சக்தி குறைஞ்சிடுச்சாப்பா...இல்லை மூட்டை கட்டி வசிட்டியாப்பா.
பதில் நீயே சொல்லப்பா...
3 கருத்துக்கள்:
mind your words
maind your words
உண்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனமில்லாத chiyaan அவர்களே - " mind your words".
Post a Comment