ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை நதி​நீர் ஆணை​யம்


கூவம் உள்​ளிட்ட நதி​க​ளின் சீர​மைப்​புத் திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்த சென்னை நதி​நீர் ஆணையம் என்ற தனி அமைப்பு ஏற்​ப​டுத்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.

​இந்த ஆணை​யத்​துக்கு துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தலை​வ​ராக இருப்​பார்.

கூவம் ஆற்​றைச் சீர​மைத்​தல்,​ வானூர்தி தொழிற்​பூங்கா மற்​றும் நிதி​ந​க​ரம் ஏற்​ப​டுத்​து​தல் ஆகிய திட்​டங்​கள் தொடர்​பாக துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மை​யி​லான குழு சிங்கப்பூர் சென்றது. அங்கு,​ அமைச்​சர்​கள் மற்​றும் அதி​கா​ரி​க​ளைச் சந்​தித்து பல்​வேறு ஆலோ​ச​னை​களை நடத்​தி​யது அந்​தக் குழு.

​இந்த நிலை​யில்,​ தங்​க​ளது பய​ணம் குறித்து முதல்​வர் கரு​ணா​நி​தி​யி​டம் தலை​மைச் செயலகத்தில் வியா​ழக்​கி​ழமை விளக்​கி​னார் துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின்.

இது​கு​றித்து,​ அரசு வெளி​யிட்ட செய்தி:​

கூவம் நதி​யின் இன்​றைய நிலைக்​குக் கார​ண​மாக உள்ள பல்​வேறு சுற்​றுச்​சூ​ழல் பிரச்​னை​கள்,​ அவற்​றைக் களை​வது,​ சிங்​கப்​பூர் நதி​யைப் போலவே கூவத்​தை​யும் மாற்​றி​ய​மைத்​திட தேவையான நட​வ​டிக்​கை​கள் பற்றி துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் விளக்​கி​னார்.

65 கி.மீ., தூரத்​துக்கு:​ கூவம் உற்​பத்​தி​யா​கும் இட​மான திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள கூவம் ஏரி​யில் இருந்து அது கட​லில் கலக்​கும் இடம் வரை மொத்​தம் 65 கி.மீ., தூரம் உள்​ளது.

​இந்த தூரத்​துக்கு செயல்​ப​டுத்​தப்​பட வேண்​டிய திட்​டங்​கள் பற்​றி​யும் முதல்​வ​ருக்கு விளக்கப்பட்டதாக அர​சின் செய்​தி​யில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. ​

​சென்னை நதி​நீர் ஆணை​யம்:​ கூவம் மற்​றும் சென்​னை​யில் உள்ள மற்ற நதி​க​ளின் சீர​மைப்​புத் திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்த முதல்​கட்​ட​மாக சென்னை நதி​நீர் ஆணை​யம்' என்ற தனி அமைப்பு ஏற்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது. துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் இந்த அமைப்​பின் தலை​வ​ராக இருப்பார். இதில்,​ குடிசை மாற்று வாரிய அமைச்​சர்,​ சுற்​றுச்​சூ​ழல் துறை அமைச்​சர்,​ தலை​மைச் செய​லா​ளர் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட துறை​க​ளின் செய​லா​ளர்​கள் உறுப்​பி​னர்​க​ளாக இருப்​பார்​கள் என்று அரசு தெரி​வித்​துள்​ளது.

​அதி​கா​ரி​கள் ஆய்வு:​அர​சின் இந்த அறி​விப்​பைத் தொடர்ந்து,​ கூவத்​தைத் தூய்​மைப்​ப​டுத்​தும் திட்டத்​துக்​கான பூர்​வாங்​கப் பணி​களை பொதுப்​ப​ணித் துறை அதி​கா​ரி​கள் தொடங்​கி​யுள்​ள​னர். கூவம் ஆற்​றுப் பகு​தி​களை வியா​ழக்​கி​ழமை மாலை ஆய்வு செய்​த​னர்.

​இது​கு​றித்து,​ பொதுப்​ப​ணித் துறை அதி​கா​ரி​க​ளி​டம் கேட்ட போது,​ ""65 கி.மீ. நீள​முள்ள கூவம் நதியைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணி பல்​வேறு கட்​டங்​க​ளாக மேற்​கொள்​ளப்​ப​டும். முதல்​கட்டமாக,​ தொழில்​நுட்ப ரீதி​யாக ஆய்வு செய்​யும் பூர்​வாங்​கப் பணி​கள் நடை​பெ​று​கின்​றன'' என்று தெரிவித்தனர்.
---------------------------------------------------------------
முன்பு கருணாநிதி கூவத்தைச் சுத்தப்படுத்தி, சீரமைப்பதாகக் கூறி, அது முடியாமல் போயிற்று. ஆனால் இப்போது நெற்குன்றம், ரயில்நகர், கோயம்பேடு பகுதிகளில் கூவம் கரைகள் சுத்தம் செய்யப்பட்டு, செடிகொடிகள் அகற்றப்பட்டு சாக்கடை (நதி) ஆழப்படுத்தப்பட்டு, நீர் விரைவாக ஓடுவதைப் பார்த்ததும் நிச்சயம் இப்போது ஏதாவது நல்லது நடக்கும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.

கரைகளில் தடுப்பு கட்டப்பட்டு, தண்ணீர் தேங்காமல் ஓடினாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.  சுற்றுச் சூழல், நல வாழ்வு, சுற்றுலா முதலிய பிற நோக்கிலும் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்.எனவே, சென்னையில் கழிவு நீரும் குப்பைக்கூளங்களும் தொழிற் குப்பைகளும் கூவத்தில் சேராமல் இருக்கவும் நிலையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் துணையில்லாமல், ஆதரவில்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெறாது. ஆதலால் தமிழக அரசு கோவத்தை சுத்தப் படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவையும் பெற வேண்டும்.

பேச்சை குறைத்து செயலில் சிறப்பாக செயல்படுவதே துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொள்கை. சென்னை நதிநீர் திட்டத்துக்கு தலைமை ஏற்றுள்ள துணை முதல்வர் திட்டத்தை விரைவாகவும், நிறைவாகவும் நிறைவேற்றுவார் என்பதில் ஐயமில்லை.

ஒரு குறையுமில்லாமல் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் நல்லது செய்தால் பாராட்ட வேண்டியதுதானே.

Posted by போவாஸ் | at 2:50 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails