தேவநாதனுக்குப் ‘‘செருப்பாபிஷேகம்’’


Important incidents and happenings in and around the worldகாஞ்சியிலே என்ன நடக்கிறது? மச்சேஸ்வரன் கோயிலாம் அங்கு ஓர் அர்ச்சகப் பார்ப்பானாம். அவன் பெயர் தேவநாதனாம்.


கோயிலுக்கு வரும் பக்தப் பெண்களைக் கோயில் கருவறைக்குள்ளேயே வைத்து சரசலீலை செய்தானாம் உடலுறவு கொண்டனாம் ஊரே சிரிக்கிறது.


அந்தக் காவாளி அந்தக் கேடு கெட்ட காரியத்தைச் செய்ததை கைப்பேசி வழியாக ஒளிப்படமும் எடுத்து வைத்திருக்கிறானாம் புழுத்த நாய் குறுக்கே போகாது அப்படி ஒரு ஆபாசக் கூவம்!

நீதிமன்றத்திற்கு வந்தவனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் “நல்ல முறையில் வரவேற்று இருக்கிறார்கள். செருப்படி, துடைப்பக் கட்டை அடி, சாணியடி சகிதமாக வரவேற்று இருக்கிறார்கள்.


அதே காஞ்சியிலே ஜெயந்திர சரஸ்வதி அரங்கேற்றிய சமாச்சாரத்தை அவரின் சிஷ்ய கே(£)டி தொடர்ந்திருக்கிறான் அவ்வளவுதான்.ஒன்றை எல்லோரும் மறைத்துவிட்டார்கள் பார்ப்பனர்களோ அவர்களின் ஊடகங்களோ ஒன்றை அழுத்தமாக மறைத்து விட்டன. 


இவ்வளவு ஆபாசம் வழிந்து ஓடியதே அந்தக் கோயிலின் நடையைச் சாத்தினார்களா? சந்நிதானம் தீட்டுப்பட்டு விட்டது என்று சுத்திகரிப்புச் செய்தார்களா?


ஆகமத்துக்கு விரோதமாக அநியாயங்கள் நடந்துவிட்டன என்று சொல்லி ஆன்மிக முறையில் சடங்குகளைச் செய்தார்களா?


அப்படி ஏதாவது செய்திதான் கசிந்ததுண்டா?


இதே பார்ப்பனர்கள் சாமிக்குத் தமிழில் பூஜை செய்தால் தீட்டுப் பட்டுவிடும் என்று “சோ” ராமசாமி வரை புலம்புகிறார்கள்.


கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள திருமணி முத்தீசுவரவர் கோயிலில் தமிழில் குடமுழுக்குச் செய்ததற்காக (9.9.2002) பார்ப்பன அர்ச்சகர்கள் என்ன செய்தார்கள்? கோயிலை இழுத்துப் பூட்டவில்லையா? பல நாள்கள் இக்கோயில் மூடிக் கிடக்கவில்லையா? சாங்கியங்கள், சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பிறகுதான் கோயிலை மீண்டும் திறந்தார்கள். தமிழில் குடமுழுக்குச் செய்ததற்காக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, அர்ச்சகர் சங்கமும் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

சிதம்பரம் நடராசன் கோயில் திருச்சிற்றம்பலத்திலே தமிழில் தேவாரம் பாடினார் என்பதற்காக ஓதுவார் ஆறுமுகசாமி என்ற பெரியவர் தீட்சதப் பார்ப்பனர்களால் அடித்துத் துவைக்கப்படவில்லையா? அவர் கை முறிந்து விடவில்லையா?


மனநலம் சரியில்லாத கிறித்துவ இளைஞன் டேவிஸ் குருவாயூர் கோயிலுக்குள் நுழைந்தான் என்பதற்காக, கோயில் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, சுத்திகரித்தார்களே (தினகரன் 21.11.2005) அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் செய்தது அதைவிட அல்பமான காரியமோ? பெரியவா செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்பதுஇதுதானோ!


1971_இல் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றிய போது அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றார்களே நினைவிருக்கிறதா?


அப்பொழுது இந்தப் பார்ப்பனர்கள் “வைகனாச” ஆகமம்” என்ற ஒன்றை அவர்களுக்கு வசதியாகத் தாக்கல் செய்தார்களே அந்த வைகனாச ஆகமம் என்ன சொல்லுகிறது?


பொது வழிபாட்டுக்குரிய கோயில்களில் கடவுளின் உருவத்தையோ, சிலையையோ அர்ச்சகரைத் தவிர சத்திரியர்கள் தொட்டு விட்டால் சாமி சிலை தீட்டாகி விடும். அதனை சுத்திகரிக்க தூய நீரினால் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். பின்னர் ஏழு கலசங்களை வைத்து முறைப்படி வணங்கியபின் சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும். வைசியர்கள் தொட்டு விட்டாலும் சாமிதீட்டாகி விடும். 24 கலசங்களைச் செய்து வைத்து சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும் பிராமண போஜனமும் செய்யப்பட வேண்டும்.


சூத்திரர்களான நான்காம் வருணத்தவன் தீண்டினாலும் கடவுள் தீட்டாகி விடுவார் அப்பொழுது என்ன செய்ய-வேண்டுமாம்? 108 கலசங்களைச் செய்து வைத்து, மஹாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே, இந்த ஆகமக் கூற்றுகளை ஏற்றுக் கொண்டுதானே நீதிபதிகள் தீர்ப்புக் கூறினார்கள்?


(அதிலே ஒரு நீதிபதி அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்த பார்ப்பனர்)


“ஒரு சைவ, அல்லது வைஷ்ணவ கோயிலில், அர்ச்சகர் நியமனம் அந்தக் கோயிலுக்கு இணக்கமான ஆகமத்தில் கூறப்பட்டிருக்கும் ஆணைகளுக்கு இணங்கவே செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் அது இச்சட்டத்தின் 28 ஆவது செக்ஷனுக்கு முரணானது மட்டுமல்ல, மதப் புழக்கத்தில் தலையிடுவதாகவும் ஆகும். இதன் தவிர்க்க முடியாத விளைவாக கடவுளின் உருவம் தீட்டுப்பட்டு விடும் என்று தீர்ப்புக் கூறப்பட்டதே!
இப்படியெல்லாம் ஆகமங்கள் கூறுகின்றன உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறுகிறது.


அதே நேரத்தில் கோயிலில் உள்ள ஓர் அர்ச்சகன் கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களை இழுத்துச் சென்று காமக் களியாட்டம் ஆடி, உடலுறவு கொண்டு கோயிலைக் காமக் கோட்டமாக பள்ளியறையாக, படுக்கையறையாக மாற்றிக் கூத்தடித்தால் சாமி சிலை தீட்டாகி விடாதா?
அதற்குப் பரிகாரம் செய்யப்படாதது ஏன்?
பக்தர்கள் யாராவது இந்தக் கேள்வியை எழுப்பியதுண்டா?

அர்ச்சகப் பார்ப்பான் எப்படியும் நடந்து கொள்ளலாம். காரணம், அவன் பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவன் பிர்மாவே, தான் பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாளவில்லையா?


அந்தப் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணன் கருவறையைக் காமக் கழிநீர் கழிக்கும் (கழிவறை) கக்கூசாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு என்று “சோ” ராமசாமிகள் எழுதினாலும் எழுதுவார்கள்; அதற்கு வக்காலத்து வாங்கி பழ. கருப்பையாக்கள் “ஹார்-மோனி’’யம் வாசித்தாலும் வாசிப்பார்கள் யார் கண்டது?


அன்றைக்குத் தீட்சிதப் பார்ப்பனர்கள் சிதம்பரம் நடராசன் கோயிலில் தமிழராகிய ஆறுமுகசாமியைத் தாக்கினார்கள். இன்றைக்கோ தமிழ்ப் பெண்கள் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதனுக்கு நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.


விழுந்தது செருப்படி ஏதோ தேவநாதன் என்ற ஒரு பார்ப்பான்மீது மட்டும் என்று நினைக்க வேண்டாம்! 

இன்றைக்கு பார்ப்பனர்களைத் தாங்கிப் பிடிக்கும் பார்ப்பனியப் பாதங்களைக் கழுவிக் குடிக்கும் கபோதிகளுக்கும்,
பார்ப்பனியத் திமிரைப் பூணூல் போட்டு முறுக்கிக் காட்டும் கும்பலுக்கும்,
பக்தியின் பெயரால் நடத்தும் ஆபாசக் கூத்துகளுக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் கொடுத்த “பரிசு அது”.


அன்று தமிழ் நாட்டு வீரப் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டினார்கள். என்றால், இன்றைக்குத் தமிழ்நாட்டுப் பெண்கள் பார்ப்பனிய ஆபாச சேட்டைகளுக்குச் செருப்பாபிஷேகம் (பாதுகா பட்டாபிஷேகம்) செய்து, பெரியார் மண்ணின் மகத்துவத்தை வீர தீரத்தைப் பாரீர் என்று பாருலகுக்கே தெரிவித்து விட்டார்கள்! வாழ்க அந்த மறக்குல மானமிகு தமிழ் மகளிர் பட்டாளம்!


பார்ப்பனர்களோ கப்சிப்! உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்திபோல பதுங்கிக் கிடக்கிறார்கள். தமிழர்களே, உரக்க ஒரு முறை சிரியுங்கள். பக்திக் குட்டையில் உழலும் தமிழர்களும் உடம்பைக் கொஞ்சம் கிள்ளிக் கொண்டாவது சிந்தித்துப் பார்க்கட்டும்!


நன்றி:விடுதலை ஏடு.

Posted by போவாஸ் | at 1:03 PM

2 கருத்துக்கள்:

Anonymous said...

Stop tarnishing the Brahimin's Image. They have helped us to defeat the Tiger Terrorist in Sri Lanka. Rohana Jeyatunga

Post a Comment

Related Posts with Thumbnails