மன்மோகன் சிங்கின் விமான செலவுக்கு 230.35 கோடி ரூபாய்.
மன்மோகன் சிங்கின் விமான செலவுக்கு 230.35 கோடி ரூபாய்.
'சிக்கன நடவடிக்கை' என்ற நாடகத்தை சமீபத்தில் காங்கிரஸ் அறிவித்தது. பிரணாப் முகர்ஜீ தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர்கள் சிலர் விமான பயணத்தின் போது பொருளாதார வகுப்பிலும், இன்னும் சில மந்திரிகள் ரெயிலிலும் பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.
ஆனால் ஒரே ஒரு மந்திரி மட்டும், செலவைக் குறைக்க முடியாமல் இருக்கிறார். அவர்தான் நம் நாட்டு பிரதம மந்திரி...மன்மோகன் சிங்.
2004 முதல் 2008 வரை நமது பிரதமர் அவர்களின் வெளிநாட்டு போக்குவரத்துக்காக மட்டும் 230.35 ரூபாய் கோடி செலவிடப் பட்டுள்ளது. நான்கு வருடத்தில் 230.35 கோடி ரூபாய் செலவு. இந்த 230.35 கோடியில், 223.81 கோடி ரூபாய் மட்டும், பிரதமருக்கேன்ற பிரேத்யேகமாக இருக்கும் ஸ்பெஷல் விமானம் ஏர் இந்தியாவிடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதற்காக செலவிடப் பட்டுள்ளது.
நான்கு வருடங்களில் 34 முறை வெளிநாடு சென்று திரும்பியுள்ளார் நம் பிரதமர். அதற்கான விமான வாடகை செலவு மட்டுமே 223.81 கோடி ரூபாய்.
அவர் வெளிநாடு செல்லும் போது எந்நேரமும் அவரை தொடபு கொள்ளக் கூடிய தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், அதற்குரிய நடைமுறைகளுக்கு மட்டும் 5.32 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் இதர செலவுகளுக்காக செலவிடப் பட்டுள்ளது. இப்பொழுது, 900 கோடி ரூபாயில் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் பிரேத்யகமாக, ஸ்பெசலாக சிறந்த முறையில் தயாரிக்கப் பட்ட மூன்று அதி நவீன விமானங்கள் வாங்க பட்டுள்ளது.
மூன்றில் ஒரு விமானத்தை பிரதமர் பயன் படுத்துவார்.
இரண்டாவது விமானத்தை ஜனாதிபதி பயன் படுத்துவார்.
மூன்றாவது விமானத்தை யார் பயன் படுத்துவது ?
யாருக்காக மூன்றாவது விமானம் வாங்கப் பட்டது ?
காங்கிரஸ் மேலிடமான சோனியா குடும்பத்திற்கா ?
மன்மோகன் சிங்கின் போக்குவரத்துக்கு ஆகும் செலவை குறைத்தாலே பல கோடிகள் மிச்சமாகும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா?
இன்னும் இரண்டு மாத காலங்களில் ஏதோ ஒரு உலக மாநாட்டுக்காக Pittsburgh and Trinidad ஆகிய இடங்களுக்கு செல்ல இருக்கிறார்.
அப்பொழுது பிரதமர் மன்மோகன் சிங்கும் 'சிக்கன நடவடிக்கை' என்ற நாடகத்தை அரங்கேற்றுவாரா அல்லது வழக்கம் போல செல்வாரா?.....
விரைவில் தெரிந்து விடும்.
source:ibnlive
0 கருத்துக்கள்:
Post a Comment