டி‌வி‌யி‌ல் ஆபாச ‌நிகழ்ச்சிகள் - குடும்பங்கள் சீர்குலைய போவது நிச்சயம்


தொலைக்காட்சி‌‌‌ அலைவரிசைகளில் நள்ளிரவு நேரத்தில் ஆபாச நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

த்திய தகவல் லிபரப்புத் துறை அமைச்சர் ம்பிகா சோனி, தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு என புதியவிதிமுறைகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி வகுத்துள்ள 2 யோசனைகள், மிகவும் முக்கியமானவை. குறிப்பிட்ட சேனல்களை, தங்கள் குழந்தைகள் பார்க்கக்கூடாது என்று பெற்றோர் நினைத்தால், அத்தகைய சேனல்களை லாக் செய்யும் வசதி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

தொலைக்காட்சிகளில், நள்ளிரவு நேரத்தில், வயது வந்தோருக்கான ஆபாச நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதிக்கலாம் என்றும் அவர் கருதுகிறார். இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை, இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி கொடுக்கலாம் என்பது அவரது யோசனை.

பல்வேறு வயதுள்ள நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில், ஒரே ஒருதொலைக்காட்சி பெட்டி மட்டுமே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆபாச நிகழ்ச்சிகளுக்கு தனியாக நேரம் ஒதுக்குவது, ல்லவிஷயமாக இருக்கும் ன்றுஅம்பிகா சோனி கருதுகிறார்.

வெளிநாடுகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை, இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அம்பிகா சோனி விரும்புகிறார். இவை பற்றிதொலைக்காட்சி சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கருத்து ஒற்றுமை ஏற்பட சிறிது காலம் ஆகும் ன்று அவர்கள் கூறினர்.

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வெளிநாடுகளில் நல்ல விஷயம் பலவற்றுக்கு பின்பற்றப்படும் நடைமுறை, இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினால் சந்தோசப்படலாம். அதை விட்டு விட்டு ஆபாச நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகளில் இருக்கும் நடைமுறை போல பின்பற்ற, அம்பிகா சோனி விரும்பிகிறாராம்.

இருக்குற கலாச்சார சீர்கேடுகள் போதாதென்று மத்திய அரசே தகுந்த அதிகாரத்துடன் கலாச்சாரசீர்கேடுக்கு வழி வகுத்துக் கொடுக்கிறது.

இந்தியா மேலும் மேலும் கீழே போவதற்கு நல்ல ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

இப்பவே பாலீயல் ரீதியாக பலபல பிரச்சனைகள் நாட்டில் எழுகின்றன.

குடும்ப
ங்கள் சீர்குலைய போவது நிச்சயம்.

Posted by போவாஸ் | at 1:56 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails