நதிநீர் இணைப்பு பற்றிய ராகுல் கருத்து சரியே - சொல்கிறார் அதிமேதாவி இளங்கோவன்
நதிநீர் இணைப்பு தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் சரியானவைதான் என்றார் மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
தீவிரவாதத்தால் உலகில் எண்ணற்ற அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வகையிலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. காஷ்மீரில் தீவிரவாதிகளால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும், அதில் ஈடுபடுவோரையும் ஆதரிக்காது.
தேசிய அளவில் நதிகளை இணைப்பதால் சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற ராகுல் காந்தியின் கருத்து ஏற்கத்தக்கதே.
ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளை அகலப்படுத்தும்போதே ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரத்துக்கு நதிகளை இணைத்தால் எத்தனை கிராமங்கள், நகரங்கள், இயற்கை வளம் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். எனவே நதிநீர் இணைப்பு குறித்து சிந்தித்து, விவாதித்து, அனைவரும் ஏற்க கூடிய வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரசுக்கு அதிக அக்கறை உள்ளது. அங்கு நிலவும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசும் முயற்சித்து வருகிறது. அதேசமயம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான பிரபாகரனின் துதிபாடுவதையோ, அவரது படத்துக்கு பூஜைகள் செய்வதையோ ஏற்க முடியாது என்றார்.
சோனியா காந்தி குடும்பத்தை துதி பாடிக் கொண்டு தன்னயும், தன் குடும்பத்தினரையும் வளர்த்துக்கொள்வதை மட்டுமே இலட்சியமாக கொண்டுள்ள இளங்கோவன் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் பற்றியோ, ஈழத்தமிழரைப்பற்றியோ, பிரபாகரனைப்பற்றியோ பேசுவதற்கு எந்த ஒரு சராசரி தகுதியும் இல்லை.
சோனியா குடும்பத்தை துதி பாடிக் கொண்டிருக்கும் இளங்கோவன், தன் இருப்பிடத்தை நிரந்தரமாக தில்லியில் மாற்றிக் கொள்ளலாமே. ஜால்ரா போட வசதிகள், வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
நதிகளை இணைப்பதில் எந்த தவறும் இல்லை. அது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். முன்னாள் பிரதமர் நேரு பல அணைகளை கட்டினார். மேலும் அந்த அணைகளே நவீன இந்தியாவின் தூண்கள் என்று கூறினார்.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில், ஐரோப்பாவில், ஆஸ்திரேலியாவில் என்று உலகம் எங்கும் கடலுக்கு செல்லும் நீரை தேக்கியும், அதை பயனுள்ள வழிகளில் திருப்பியும் விவசாயத்தையும் அதன் மூலம் பொருளாதாரத்தையும் உயர்த்தி உள்ளார்கள்.
உலகில் அதிகம் மழை ப்பையும் இடமான, ஒரிசா மாநிலத்தில் இருக்கும் சிரபுஞ்சியிலையே தண்ணீர் பஞ்சமாம். காரணம் என்ன ?. பெய்யும் மழை நீரை முறையான வழியில் சேமித்திட வழியில்லை.
இயற்கையுடன் ஒத்து வாழ ஆசைப்படும் இளங்கோவன் ஆதிவாசியைப் போல இல்லை தலைகளை கட்டிக்கிட்டு திரியலாமே.
இவரை போன்ற கருப்பு ஆடுகள் திரிந்து கொண்டும், வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டும் இருப்பதனால் தான் தமிழர்களை யாரும் மதிப்பது இல்லை.
இவரையெல்லாம் ஆப்பிரிக்காவில இருக்குற நைஜீரியா நாட்டுல தங்க சுரங்கத்துல தங்கம் எடுக்குற வேலைக்கு அனுப்பனும்.
கண்டிப்பாக இவர் இனி அடுத்து வரும் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற வாய்ப்பேயில்லை. அந்த அளவுக்கு பணத்திற்கு மேல் வெறுப்பை சம்பாதித்து வைத்து இருக்கிறார்.
இவரது தேர்தல் தோல்வி, வரலாறில் இடம்பெறும் அளவுக்கு சாதனை தோல்வியாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
2 கருத்துக்கள்:
தங்கம் எடுக்கிற வேலைக்கா..?!வேண்டாம்.ராகுல்ஜி பின்னால செக்யூரிட்டியாக ஓடடட்டும்!
Yes he is a blackshep
Post a Comment