கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி

கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி


கர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் பேய் மழை காரணமாக, 11 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. இருமாநிலங்களிலும் மழை காரணமாக 130 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள புனிதத் தலமான மந்திராலயம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.


இதன் கோரத்தை பாருங்கள்.

இனியாவது தாமதிக்காமல், ஈகோ பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் விட்டு விட்டு உடனே நதிகளை இணைக்கவேண்டும். இருக்கும் ஏரிகளை தூர் வாரி,மேலும் பல ஏரிகளை அமைக்க வேண்டும்.


இனிவரும் காலங்களில் இது போன்ற பேய் மழையும், பேரு வெள்ளமும் ஏற்படும் சூழ்நிலைகளில், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பில்...பாதியாவது குறைக்கமுடியும்.


வீடிழந்து, வாசலிழந்து, வயல்வெளிகள், பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவித் தொகையால் ஈடுகட்ட முடியாது. கிட்டத்தட்ட்ட 26,000 பேர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்தியா முழுவதும் இருக்கும் நதிகளை இணைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். செயல் படுத்தி முடிப்பதற்கு வருடங்கள் ஆகலாம்.


மாநிலம் மாநிலமாக பிரித்து, மாநிலங்களுக்குள் புரிந்துணர்வு ஏற்பட்டு நதிகளை இணைப்பதை செயல் படுத்தினால் வெக விரைவிலேயே இணைக்க முடியும். 


ஒரு புறம் கரை புரண்டு ஓடும் வெள்ளம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீர். ஒரு புறம் வானம் பார்த்த பூமியாய், தண்ணீருக்காக ஏங்கும் பூமி.
இந்த நிலை மாற வேண்டும்.
முயற்சி எடுக்குமா அரசு...என்பதே ஒவ்வொருவருடைய எண்ணம்.

Posted by போவாஸ் | at 12:29 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails