பழசிராஜா:16-ந்தேதி ரிலீஸ்: 500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது


தென்திருவிதாங்கூர் சமஸ்தானமாக கேரளமாநிலம் இருந்தபோது அதை ஆட்சிபுரிந்தவர் பழசிராஜா. இவர் வெள்ளையர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராடி வீரர் என மலையாள வரலாற்றில் சித்தரிக்கப்படுகிறார். இந்த வரலாற்று பின்புலத்தை மையமாக வைத்து பழசிராஜா என்ற கதையை திரைப்படமாக எடுத்துள்ளனர்.

மலையாளத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தில் மம்முட்டி பழசிராஜாவாக நடிக்கிறார். அவரது தளபதியாக சரத்குமார் நடிக்கிறார். மற்றும் நெடுமுடிவேணு, மனோஜ் கே.ஜெயன், பத்மப்ரியா, தனிகா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பல கோடி ரூபாய் செலவில் தயாரான இத்திரைப்படத்துக்கு தியேட்டர்களில் கட்டண உயர்வு அளிக்கவேண்டும் என்று தயாரிப்பு நிர்வாகம் அரசை வலியுறுத்தியது. கடந்த மாதமே வெளியாக வேண்டிய பழசிராஜா திரைப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிபோனது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பழசிராஜா திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யபட்டு வெளியாகிறது. வருகிற 16-ந்தேதி ரிலீஸ் ஆகும் பழசிராஜா உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை யொட்டி பழசிராஜா ரிலீஸ் ஆவதால் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

Posted by போவாஸ் | at 1:54 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails