நகைச்சுவை துணுக்குகள்
வாழ்க்கை என்பது டெஸ்ட்
வாழ நினைப்பது பெஸ்ட்
எதிலும் வரணும் ஃபர்ஸ்ட்
அதுவரை எடுக்காதே ரெஸ்ட்
தேள் கொட்டினால் வலிக்கும்
முடி கொட்டினால் வலிக்குமா?
செக்யூரிட்டி: மேனேஜர் ஏன் கோபமாக பேசிட்டுப் போறார்?
டிரைவர் : சடன் பிரேக் போடும்போது பார்த்துப் போடுன்னார்
செக்யூரிட்டி:நீ அதுக்கு என்ன சொன்ன?
டிரைவர்:பிரேக் போடும்போது ஒங்களை எப்பிடித் திரும்பிப் பார்க்க முடியும் சார்?ன்னு கேட்டேன்.
பில்லி, ஏவல், சூனியம்ங்கறதை எல்லாம் நம்புறீங்களா?
"பில்லி, ஏவல் - சூனியம்ங்க றதை நம்புறேன்.'
அவ்வளவு பெரிய நகரத்துல ஒரு வீடுகூட இல்லடா? ஆச்சர்யமா இருக்குதா? நான் பார்த்தது "மேப்'லடா!
ஏன் தம்பி படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்கே?
மூடி வைக்கணும்னு இருக்கேன்.
மாலையில் சோர்வாக வீட்டுக்குத் திரும்ப பீட்டர் காலிங் பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்த அவனுடைய மனைவி ஸ்டெல்லா உடனே பொசுக்கென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
"என்னாச்சு ஸ்டெல்லா... ஏன் அழுவுற?''
"உங்கம்மா என்னை அவமானப்படுத்திட்டாங்க...''
"எங்கம்மாவா? அவங்கதான் வெளிநாட்டில இருக்காங்களே... அப்புறம் எப்படி?''
"இன்னைக்கு காலையில உங்க பெயருக்கு ஒரு லெட்டர் வந்தது. ஆர்வத்துல பிரிச்சிப் படிச்சிட்டேன்...''
"எனக்கு வந்த லெட்டர்தானே படிச்சே அதுல என்ன தப்பு?''
"அந்த லெட்டரோட கடைசியில உங்க அம்மா, "ஸ்டெல்லா இதை நீ படிச்சவுடனே மறக்காம என் மகன் படிக்கிறதுக்கும் கொடு'ன்னு எழுதியிருக்காங்க!'
ஒரு நாள் பணம் கொடுத்தா போதும்,முப்பது நாளும் விடாம அர்ச்சனைதான்!''
"எந்தக் கோயில்ல?''
"என் வீட்டுலதான். ஒண்ணாம்தேதி சம்பளத்த கொடுத்ததும் அர்ச்சன தொடங்கினாள்ன்னா மாசம் முடியறவரைக்கும் விடமாட்டா...
வாழ்க்கையில் முன்னேற நினைப்பவன் வழியைத் தேடுகிறான்..
வாழ்க்கையில் முன்னேற நினைப்பவன் வழியைத் தேடுகிறான்..
அதைக் கடைப்பிடிக்க மறந்தவன் காரணத்தைத் தேடுகிறான்
நீ நேசிப்பவர்களுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு
ஆனால் எதற்காகவும் நேசிப்பவர்களை விட்டுக் கொடுக்காதே!
1 கருத்துக்கள்:
நல்ல நகைச்சுவை பதிவு
Post a Comment