நகைச்சுவை துணுக்குகள்

கார் ஒன்று வேகமாக போய்க்கொண்டிருப்பதை டிராபிக் போலிஸ்காரர் பார்த்தார். அதனை தனது பைக்கில் விரட்டினார். போலிஸ் துரத்துவதைப் பார்த்ததும் அவன் இன்னும் வேகமாக ஓட்டினான். ஏறக்குறைய இரண்டு மணி நேர துரத்தலுக்குப் பின், போலிஸ்காரர் அவனை மடக்கிப் பிடித்தார்.
“ஏன் வேகமாகப் போனே? என்னைப் பார்த்ததும் நிக்காம, இன்னும் வேகமாகப் போனது எதுக்கு?”
“போனவாரம் என் மனைவி ஒரு போலிஸ்காரரோட வீட்டை விட்டுப் போயிட்டா! நீங்க தான் அவரோன்னு தப்பா நினைச்சிட்டேன்!”
“அதுக்கு எதுக்கு நிக்காமப் போகனும்?”
“இல்லை, நீங்க அவளைத் திருப்பித் தர வந்திருக்கீங்களோன்னு நினைச்சிட்டேன்!

பக்கத்து வீட்டுக்காரி:உன் மாமியாரை 6 பேரு சேர்ந்து  அடிச்சுகிட்டிருக்காங்க, நீ என்ன வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கே? போய் உதவி ஏதும் செய்யலையா?

மருமகள்: ஏற்கனவே 6 பேரு இருக்காங்க, என்னோட உதவி அவங்களுக்குத் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்!
பக்கத்துவீட்டுக்காரி: ???????????????????

“என்னங்க! இன்னிக்கு அதிர்ஷ்டவசமா எங்கம்மா ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பிச்சாங்க. மணிக்கூண்டு வழியா சந்தைக்கு அவங்க போயிருக்காங்க. மணிக்கூண்டை அவங்க கடந்த அடுத்த நிமிடமே, அந்தப் பெரிய கடிகாரம் மேலிருந்து தரையில் விழுந்து உடைஞ்சிருக்கு..”
“எனக்குத் தெரியும், பாழாய்ப்போன அந்த கடிகாரம் எப்பவுமே லேட்டுன்னு”
 
மருத்துவர் நோயாளியின் கணவரிடம் : உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க..
கணவர் : பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷன் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா?
மருத்துவர் : ????

நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே....?’
'ஹி...ஹி...ஆமாம்! அந்த சின்ன விஷயத்துக்குப் போய் நன்றி சொல்ல வந்தீங்களாக்கும்...?’
'அதுக்கில்லேங்க.......பையன் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்தானாமே..அதை நீங்க எடுத்தீங்களா?’
 
ஆசிரியர்: அமேசான் காடுகளில் இருக்கிற பழங்குடியினர் இலைகளாலான உடையைத் தான் அணிகின்றனர்.
மாணவன்: சார்! இலையுதிர்காலத்தில் அமேசான் காடுகளுக்கு சுற்றுலா போகலாமா?

அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”
இந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

Posted by போவாஸ் | at 9:22 PM

1 கருத்துக்கள்:

மயூ said...

சூப்பர்...:)

Post a Comment

Related Posts with Thumbnails