ஊனமுற்ற மாணவர்களுக்கு தீபாவளி பரிசு



த்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயங்களில் படிக்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கு இந்த மாதத்திலிருந்து கட்டணம் கிடையாது.


தீபாவளிப் பரிசாக இந்த முடிவை மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இந்த புதிய உத்தரவின் மூலம் நாடு முழுவதும் உள்ள 981 மத்தியப் பள்ளிகளில் படிக்கும் 2500 உடல் ஊனமுற்ற மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
அண்மையில் கேந்திரிய வித்யாலயங்களில் மாணவர்களுக்கான கட்டணம் மூன்று மடங்கு உயத்தப்பட்ட நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, வித்யாலயா விகாஸ் நிதி, படிப்புக் கட்டணம் ஆகியவற்றை மாணவர்கள் செலுத்த வேண்டியதிருக்காது.
பிளஸ்2 அறிவியல் பாட மாணவர்களுக்கு 800 ரூபாய் மாதக் கட்டணமும் கலைப் பாடப்பிரிவு மாணவர்களும் 590 ரூபாய் மாதக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசும் இது போன்று சலுகைகள் அறிவித்தால்..ஊனமுற்ற மாணவர்களுக்கு ஊக்கம் அளித்ததுபோல் இருக்கும்

Posted by போவாஸ் | at 12:30 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails