கலைஞர்' மாதிரி 'அம்மா'வும் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிட்டாங்களா
அப்போ நான் போயிட்டு வரேங்க மேடம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கலைஞரால் கூட்டணியிலிருந்து வெளியேற்றப் பட்டது, ராமதாசின் பாமக கட்சி.இதை சற்றும் எதிர்பாராத ராமதாஸ் சிக்கித் தவிக்கும் வேளையில் நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவிடம் ஒட்டி உறவாடி கூட்டணி வைத்தது. தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதியிலும் வரலாறு காணாத அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.
இதன் பின்னர் அதிமுக கூட்டணியில் இருக்கும் பிற கட்சித் தலைவர்கள் அம்மாவை சந்தித்த போதும் இவர் சந்திக்கவில்லை. சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்றே பேச்சு.
பலரும் பல வகையில் கிண்டல் செய்து எழுதினர். அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக பாமக ராமதாஸ், அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், எங்களது கூட்டணித் தொடரும், பொய் செய்திகளை தமிழக அரசு பரப்புகிறது என்றும், செயததாள்கலும் பொய்யான இந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்றும் கூறினார். நேரில் பார்க்காவிட்டாலும் போனில் பேசிக் கொள்வோம் என்று ஒரு வாறு கூறிக் கொண்டிருந்தார்.
நேற்றுகூட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு எங்கள் கட்சி ஆதரவு தரும் என்றே கூறி பரபரப்பு ஆக்கினார்.
24 மணி நேரத்திற்குள் என்ன ஆனதோ, ஏதானதோ....இன்று அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க., நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிப் பணி, எதிர்கால திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற முடிவு எடுக்கப்பட்டது என்று பாமக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
எனது ஆசை என்னவென்றால்...இனி இவரை எந்த கட்சியும் தங்களுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதே. முக்கியமாக திமுக சேர்க்கக் கூடாது. தனியே திரிந்தால்தான் அருமை புரியும்.
இவரால் தன், வன்னிய ஜாதி சமுதாயத்திற்கும் உபயோகமில்லை, தமிழக மக்களுக்கும் உபயோகமில்லை. உபத்திரவம்தான்.
ஒட்டிகொண்டிருந்த துளி மரியாதையும் இப்போ போச்சு.
-----------------------------------------------------------------------------------------------------------
"டமில் குடிதாங்கி அவர்களே, நீங்களாவே கூட்டணியிலிருந்து விலகிட்டிங்களா? இல்ல 'கலைஞர்' மாதிரி 'அம்மா'வும் உங்களை கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிட்டாங்களா. அட...சும்மா...கூச்சப்படாம உண்மைய சொல்லுங்க".
-----------------------------------------------------------------------------------------------------------
"டமில் குடிதாங்கி அவர்களே, நீங்களாவே கூட்டணியிலிருந்து விலகிட்டிங்களா? இல்ல 'கலைஞர்' மாதிரி 'அம்மா'வும் உங்களை கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிட்டாங்களா. அட...சும்மா...கூச்சப்படாம உண்மைய சொல்லுங்க".
2 கருத்துக்கள்:
நீ தி மு க பொறம்போக்கா ?
இந்தாளு ஒரு வெத்து வேட்டு என்று அம்மாவுக்கு லேட்டா புரிஞ்சிருக்கு.
Post a Comment