சாதியைக் கூறாமல் "தமிழன்' என்று கூறும் நிலை வர வேண்டும்: ஸ்டாலின்


" நீங்கள் யார்? என்று கேட்டால், நம்மில் எத்தனை பேர் நான் தமிழன் என்றோ, மனிதன் என்றோ கூறுகிறோம். எல்லோரும் அவரவர் சாதியைதான் கூறுகிறோம். இந்த நிலை மாற வேண்டும். நான் தமிழன் அல்லது நான் மனிதன் என்று கூறும் நிலை வர வேண்டும்.

சதிக்கு கால் முளைத்ததால் அது சாதி; அதேபோல, சா"தி'-க்கு கொம்பு முளைத்தால் அது "தீ'யாக மாறிவிடும் " என்றார் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நல்ல எண்ணத்தில் கூறிய மிகச் சரியான கருத்து, வரவேற்கிறோம்.

ஆனால் சொல்பவர்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டால்தான் மற்றவர்களுக்கும் தம்மைச் சாதிவழியாகச் சிந்திக்காமல் தமிழனாகவோ மனிதனாகவோ சிந்திப்பர்.

பள்ளியில் குழந்தையை சேர்க்கும்போது தேவைப்படுகுறது ஜாதி என்ற அங்கீகாரம்.
அதிலிருந்து தொடங்கி உத்தியோகம் வரை ஜாதி அடிப்படையிலேயே உதவிகளும், சலுகைகளும், ஏன், பெரிய பதவிகள்கூட ஜாதி அடிப்படையிலேயே கிடைக்கின்றது.
திமுக தொடங்கி நேற்று கட்சி ஆரம்பித்த ஓய்வு நேர அரசியல்வாதியான விஜயகாந்த் வரை தங்களது வேட்பாளர்களை ஜாதி,மத அடிப்படையிலேயே நிறுத்துகிறார்கள்.

அறிவுரைகளையும், இது போன்ற நல்ல கருத்துக்களையும் சொல்வது எளிது. ஆனால், அதை செயல்படுத்துவது மிக மிகக் கடினம்.

சமச்சீர் கல்வியைப் போல பொதுவான, சமமான கல்வி அறிவைக் கொடுத்தாலே பகுத்தறிவு பிறக்கும்.
பகுத்தறிவினால் தான் ஜாதி மத பேதங்கள் ஒழியும்.

துணை முதல்வரால் முடிந்தால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொது ஜாதி என்ன என்று கேட்கக்கூடாது, குறிப்பிடக்கூடாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும்.
இதை செயல்படுத்தினால், பள்ளியில் படிக்கும் 1000 பேரில் ஒரு 100 பேராவது ஜாதி மத பேதமில்லாமல் வளர முடியும், இருக்க முடியும்.
காலப் போக்கில் 100 பேரில் இருந்து 1000 பேர் என்று மாறுவது நிச்சயம்.
முற்றிலும் மாற குறைந்தது ஒரு தலைமுறையாவது தேவைப்படும்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

வெறும் வாய் சொல்லோடும், கைத் தட்டலுக்காக மட்டுமில்லாமல், தமிழக முதல்வர் & கோ தெளிவான முறையான நிலையான முடிவை எடுக்க வேண்டும்.

பேஷ்மன்ட் ஸ்ட்ராங்கா இருந்தா பில்டிங்கும் ஸ்ட்ராங்கா இருக்கும்.

Posted by போவாஸ் | at 3:34 PM

1 கருத்துக்கள்:

Anonymous said...

அப்பன் பெயரை சொல்லாமல் தானே சொந்த காலில் நின்று உயர் பதவிக்கு வரும் நிலை வர வேண்டும்.

பத்து பேத்துக்கு குழி தோண்டி தன் புள்ளைக்கு பதவிக்கு தர கூடாது.

Post a Comment

Related Posts with Thumbnails