உஷார்..உஷார்..!!! டிசம்பர் 18-ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸ்

ஒரு வழியாக விஜய்யின் வேட்டைக்காரன் இழுபறி முடிவுக்கு வந்து விட்டது. படத்தில் சில காட்சிகளை கண்டிப்பாக ரீஷூட் நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறப்பட்டதை, படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்களான ஏவிஎம் ஒப்புக் கொண்டதால், வரும் டிசம்பர் 18-ம் தேதி வேட்டைக்காரன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 Vettaikkaran
இந்தப் படம் கிறிஸ்துமஸ் அல்லது அதற்கு முன்பே வெளியாகக் கூடும் என்று நேற்று தட்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். 
படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
படத்தின் சில காட்சிகளை மட்டும் மீண்டும் படப்பிடிப்பு நடத்தி சன் விரும்பும் வகையில் மாற்றித் தர தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியம் மற்றும் இயக்குநர் பாபு சிவன் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தக் காட்சிகள் விஜய்யின் அரசியல் குறித்தவை(இன்னும் நிறைய படனும் போலருக்கு) என்பது குறிப்பிடத்தக்கது.
பல கசப்பான அனுபவங்களை இந்தப் படத்தில் விஜய் சந்தித்தாலும், அவர் மனதுக்குப் பிடித்தமான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்தப் படம் வெளியாவதால், சென்டிமெண்டாக ஒர்க் அவுட் ஆகும் என சந்தோஷப்படுகிறாராம்.
சன் பிக்சர்ஸும் விரைவில் கண்டேன் காதலை விளம்பரங்களை நிறுத்திவிட்டு, வேட்டைக்காரனை துவங்க உள்ளது.

நல்ல வேளை இந்த படம், இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் அன்னைக்கு ரிலீஸ் ஆகலை. அதுவரை சந்தோசம்தான்.

Posted by போவாஸ் | at 9:08 PM

1 கருத்துக்கள்:

ஜெட்லி said...

பாவம் டாக்டர்

Post a Comment

Related Posts with Thumbnails