உ‌ல‌கிலேயே ‌மிக உயரமான க‌ட்டட‌ம்


உல‌கிலேய ‌மிக உயரமான க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்ட க‌ட்டட‌ம் ஐ‌க்‌கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாயில் அமை‌ந்து‌ள்ளது. இதன் உயரம் 2 ஆயிரத்து 600 அடி ஆகும்.
 
புர்ஜ் துபாய் (துபாய் கோபுரம்) என்ற அந்த கட்டிடம் துபாய் நகரின் மையப்பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு உள்ளது. 100 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தை 3 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டிமுடி‌த்து‌ள்ளன‌ர்.

இதை ‌விட உயரமான க‌ட்டட‌ங்க‌ள் க‌ட்டுவத‌ற்கான ‌தி‌ட்ட‌ப் ப‌ணிக‌ள் நட‌ந்து வ‌ந்தாலு‌ம், த‌ற்போதைய ‌நிலை‌யி‌ல் க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மிக உயரமான க‌ட்டட‌ம் எ‌ன்ற புகழை பு‌‌ர்‌ஜ் து‌பா‌ய் க‌ட்டட‌ம் பெறு‌கிறது.

இ‌ந்த க‌ட்ட‌ட‌த்தை‌க் க‌ட்டியவ‌ர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். இந்த கட்டிடம் வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி ‌திற‌ந்துவை‌க்க‌ப்பட இருந்தது. ‌‌சில மு‌க்‌கிய‌ப் ப‌ணிக‌ள் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.

 
துபாயின் மன்னராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டூம் பதவி ஏற்ற 4-வது ஆண்டு தினத்தில் இந்த கட்டிடம் திறக்கப்படுகிறது கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.

ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌ட்‌ஸி‌ல் உ‌ள்ள பல மு‌க்‌கிய சு‌ற்றுலா‌த் தள‌ங்க‌ளி‌ல் இதுவு‌ம் ஒ‌ன்றாக இணைய உ‌ள்ளது. இ‌னி து‌பா‌ய் செ‌ல்லு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளு‌க்கு‌ம், அ‌‌ப்பகு‌தி‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் வெ‌ளிநா‌ட்டினரு‌க்கு‌ம் கூட இ‌ந்த பு‌ர்‌ஜ் துபா‌ய் ‌சிற‌ந்த சு‌ற்றுலா‌த் தளமாக ‌விள‌ங்கு‌ம் எ‌ன்பதை மறு‌ப்பத‌ற்‌கி‌ல்லை.

உல‌கிலேயே ‌மிக உயரமான க‌ட்டட‌ம் எ‌ன்றது‌ம், ஒரு சாதாரண ‌விஷயமாக நா‌ம் கரு‌தி‌விட முடியாது.

100
வது மாடி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ‌லி‌ப்‌ட் சேவை, நகரு‌ம் படிக‌ட்டு‌ள், குடி‌நீ‌ர் சேவை போ‌ன்றவ‌ற்றை நா‌ம் யோ‌சி‌த்தா‌ல்தா‌ன் ச‌ற்று ‌விள‌ங்கு‌ம் இத‌ன் சாதனை.

அதாவது, இ‌ந்த க‌ட்ட‌டம் முழு‌மை‌க்கு‌ம் ஒரு ‌நி‌மி‌ட‌த்‌தி‌ற்கு 10,000 ட‌ன் கு‌ளி‌ர் கா‌ற்று அனு‌ப்ப‌ப்பட வே‌ண்டு‌ம். ஒரு நா‌ள் முழும‌ை‌க்கு‌ம், இ‌ந்த க‌ட்டட‌த்‌தி‌ன் அனை‌த்து மாடிகளு‌க்கு‌ம் செ‌ல்லு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு எ‌வ்வளவு‌த் தெ‌ரியுமா? 9,46,000 ‌லி‌ட்ட‌ர். 

இ‌ங்கு இர‌ண்டு ‌லி‌ப்‌ட் வச‌திக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ஒ‌வ்வொ‌ன்று‌ம் 21 நப‌ர்க‌ள் செ‌ல்லு‌ம் வகை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த ‌‌லி‌ப்டுக‌ள் ஒரு நொடி‌க்கு 18 ‌மீ‌ட்ட‌ர் தூ‌ர‌ம் செ‌ல்லு‌ம் வகை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. உல‌கிலேயே ‌மிக உயர‌த்‌தி‌ற்கு அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌லி‌ப்‌ட் வச‌தி இதுவாக‌த்தா‌ன் உ‌ள்ளது.

இ‌தி‌ல் பல ‌உணவக‌ங்களு‌ம், ஷா‌ப்‌பி‌ங் மா‌ல்களு‌ம், ‌நிறுவன‌ங்களு‌ம், ஹோ‌ட்ட‌ல்களு‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌ந்த க‌ட்டட‌ம் ‌திற‌ந்த ‌‌பிறகு, துபா‌யி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌ல், ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌‌ட்டி‌‌ன் ச‌ரி‌ந்து‌ள்ள பொருளாதார‌ம் உய‌ர்வை நோ‌க்‌கி‌ச் செ‌ல்லு‌‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. 

 

மேலும் சில படங்கள் 
    burj dubai



Posted by போவாஸ் | at 7:40 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails