40 லட்சம் பேருக்கு இலவச கலர் டி.வி: கருணாநிதி.
5-வது கட்டமாக 40 லட்சம் ஏழைகளுக்கு இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது குறித்த சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 16வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது குறித்த சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 16வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான 15.9.2006 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டமாக 30 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும், இரண்டாவது கட்டமாக 25 இலட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும், மூன்றாம் கட்டமாக 37 இலட்சத்து 50 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து நான்காம் கட்டமாக 41 இலட்சத்து 62 ஆயிரத்து 500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டு, 31.10.2009 வரை 26 இலட்சத்து 81 ஆயிரத்து 899 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இன்று நடைபெற்ற சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில், தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், நான்காம் கட்டத்தில் 8 இலட்சத்து 37 ஆயிரத்து 500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கூடுதலாகக் கொள்முதல் செய்யலாம் என்றும்; ஐந்தாம் கட்டமாக 2009 - 2010 ஆண்டில் மேலும் 40 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்யலாம் என்றும்,
இக்கொள்முதல் தொடர்பாக 2009 நவம்பர் மாத முதல் வாரத்தில் சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருவது என்றும், 2009 டிசம்பர் மாத மத்தியில் ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதென்றும், டிசம்பர் மாத மூன்றாம் வாரத்தில் ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்வதென்றும், 2010 பிப்ரவரி தொடங்கி டிசம்பர் வரை 40 இலட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் பொது மக்களுக்கு வழங்குவது என்றும்,
இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குதற்கு முடிவுகள் மேற்கொண்ட போது நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி நெறிமுறைகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான தொழில்நுட்பக் குறியீடுகளையே (Technical Specifications) தற்போதைய ஐந்தாம் கட்ட கொள்முதலுக்கும் பின்பற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் திமுக சார்பில் துணை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், சட்டமன்றக் கட்சிகளின் தலைவர்கள் டி.சுதர்சனம் (காங்கிரஸ்), சி.கோவிந்தசாமி (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்), வை.சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல் பாசித் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), பூவை மு.ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), டி.ரவிகுமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோரும், அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, தலைமை செயலர் கே.எஸ். ஸ்ரீபதி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுவரை கொடுத்தது போதாதா ?. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி கொடுத்துட்டே இருக்க போறீங்க கலைஞர் அய்யா ?. கேட்டா, தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்றுகிறோம் என்று சொல்வீர்கள். இதுக்கு செலவழிக்கிற பணத்துல ஏதாவது கம்பெனி, பேக்டரி, மில் மாதிரி ஆரம்பிச்சா மக்களுக்கு வேலைகள் கிடைக்கும். உழைச்சு சாப்பிட ஒரு திருப்தி இருக்கும்ல. என்னத்த சொல்றது. வேதனையா இருக்கு. அவ்ளோதான்.
1 கருத்துக்கள்:
இந்த கொசு தொல்லை தாங்கலையடா சாமி... இவனுங்க எப்ப தான் திருத்துவானுங்களோ....?
என்னமோ எல்லோருக்கும் இலவச கல்வி வழங்குன மாதிரி....ச்...சீ வெக்கமா இல்ல இந்த அரசியல் வியாதிகளுக்கு?
Post a Comment