சட்ட ரிதியாக சந்திப்பேன் - விஜய் தமாஷ் அறிக்கை
வீட்டு வசதி வாரியத்திடமிருந்து விஜய் வாங்கிய நிலம் தொடர்பாக விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபற்றி விஜய் சார்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.
உதயம் திரையரங்குக்கு எதிரே உள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் ஏலம் விட்டது.(நம்பிட்டோம்) அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கி விஜய் ஜோசப் என்ற எனது சொந்த பெயரில் பதிவு செய்தேன். ஆனால், அதற்கு அருகில் இருக்கும் திருமண மண்டபத்தையும் நான் வாங்கிவிட்டதாக சிலர் புரளி கிளப்புகிறார்கள்.
நான் வாங்கிய இடத்தில் பறக்கும் ரயில் திட்டம் வர இருப்பதால் அதற்குப் பதிலாக வேறு இடத்தை வீட்டு வசதி வாரியம் அளித்தது. அதில்தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.
இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.
விஜய்க்கு தேசிய அளவில் புகழ் அதிகரித்து வருகிறது.(அப்படியா...சொல்லவேயில்ல) அதை பொறுக்க முடியாத சிலர் கிளப்பிவிடும் வீண் வதந்திகள் இவை என்று தெரிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
வதந்தின்னு தெரிய்துல அப்போ..அன்னைக்கே மறுத்து ஒரு அறிக்கை விட்டுருக்கலாமே.10 நாள் கழிச்சு சொன்னா எவன் நம்புவான்.
நாளு படம் ஓடலைனா கோடம்பாக்கத்துல கூட புகழும் மதிப்பும் இருக்காது இந்த லட்சணத்துல தேசிய அளவில் புகழ் அதிகரித்து வருகிறதாம்.சிரிப்புதான் வருது.
இந்த மாதிரி சட்டத்துக்கு புறம்பா, சமுதாய அக்கறையில்லாம, நேர்மை தவறி நடக்குறவங்களின் டாக்டர் பட்டத்தையெல்லாம் திரும்ப வாங்கனும்.
1 கருத்துக்கள்:
விஜய் டாக்டர் நான் விஞ்ஞானி
Post a Comment