நகைச்சுவை துணுக்குகள்

எ‌ன் த‌ம்‌பி ச‌ரியான பு‌த்தக‌ப் புழுடி...
ஏ‌ன் எ‌ப்பவு‌ம் பு‌த்தகமு‌ம் கையுமா இரு‌ப்பானா
‌‌நீ வேற... அவன் புத்தகத்தை வெச்சுக்கிட்டு எ‌ன்ன நெளி நெளியறா‌ன் தெ‌ரியுமா? 


டே‌ய் படி‌க்காமலே நா‌ன் 10 மா‌ர்‌க் வா‌ங்குவே‌ன்டா
எ‌ப்படிடா? ‌நீ தா‌ன் பரீட்சையில் ஒண்ணுமே எழுத மா‌ட்டியே?
ஆமா‌ம். எழு‌தினா‌த்தானே பே‌ப்ப‌ர் கச‌ங்கு‌ம், பேப்பர் நீட்டா இருந்தா 10 ம‌தி‌ப்பெ‌ண் த‌ர்றதா ந‌ம்ம டீ‌ச்ச‌‌ர் சொ‌ல்‌லி‌யிரு‌க்கா‌ங்களே? 


எ‌ன் பைய‌ன் எ‌ப்படி இரு‌க்கா‌ன் சா‌ர் ப‌ள்‌ளி‌யில...
அவ‌ன் இரு‌க்குற இடமே‌த் தெ‌ரியாது‌ங்க சா‌ர்.
அவ்வளவு அமைதியாவா இருக்கான்?
நீங்க வேற... வகு‌ப்புல இரு‌க்காம எ‌ங்கயாவது போ‌ய் ஒ‌ளிஞ்சுக்கிறான். யாராலயுமே க‌ண்டுபுடி‌க்க முடியல‌ன்னு சொல்ல வந்தேன். 


நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.
‌நீ‌திப‌தி: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!! 

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் பண‌ம் வை‌த்த‌ப் பொருளோடு சே‌ர்‌த்து எடுத்திட்டு போயிடறானே எ‌ன்ன ப‌ண்றது.
எ‌ப்பவுமே அவ‌ன் எடு‌க்காத அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கு‌ம் எடு‌த்து‌க்‌கி‌‌ட்டு‌ம் போக மா‌ட்டா‌ன். 

உ‌ங்க ‌நீளமான‌க் கூ‌ந்தலு‌க்கு‌க் காரண‌ம்
காலை‌யி‌ல் எ‌ழு‌ந்தது‌ம் ஷா‌ம்பு போ‌ட்டு கழுவுவே‌ன். மாலை‌யி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் வை‌ப்பே‌ன்.
அ‌ப்போ இர‌வி‌‌ல்?
ரொ‌ம்ப‌த் தொ‌ல்லையா‌‌‌ய் இரு‌ந்தா‌ கழ‌‌ட்டி ஆ‌ணி‌யி‌ல் மா‌ட்டிடுவே‌ன்.


ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?
மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார். 


வர வர லஞ்ச விவகாரம் இவ்வளவு முத்திப் போகும்னு கனவுல கூட நினைக்கல!
ஏன்? என்ன ஆச்சு?
ஒரு வேலைய முடிக்க எவ்வளவு லஞ்சம் ஆகும்னு சொல்றதுக்கே 100 ரூபா லஞ்சம் கேக்கறாங்கன்னா பாத்துக்கயேன். 


யார் யாரைத்தான் டிரான்ஸ்பர் செய்யறதுன்னு ஒரு வெவஸ்தை இல்லாம போயிடுச்சு!
ஏன்? என்னாச்சு?
நம்ம ஆபீஸ் வாசல்ல இருந்த பெட்டிக்கடைய வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. 


இ‌ந்த மாணவ‌ன்தா‌ன் எ‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ல் நட‌ந்த க‌ட்டுரை‌‌ப் போ‌ட்டி‌யி‌ல் முத‌ல் ப‌ரிசு‌ப் பெ‌ற்றவ‌ன்.
எதை‌ப் ப‌ற்‌றி க‌ட்டுரை எழு‌தினா‌ன்.
த‌ண்‌ணீ‌‌ரி‌ன் பய‌ன்க‌ள் எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் க‌ட்டுரை எழு‌தி‌யிரு‌க்கா‌ன்.
அ‌ப்படியா ந‌ல்லது.. உ‌ங்க‌ப்பா எ‌ன்ன ப‌ண்றாரு‌ப்பா?
பா‌ல் ‌வியாபார‌ம். 

நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?
‌நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.
ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.
எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?
‌நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.

Posted by போவாஸ் | at 6:58 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails