இளைஞர்கள் செய்த உதவி : 45 பேர் உயிர் தப்பினர்.
ஊட்டியில் கீழ் காந்தி நகர் பகுதி இளைஞர்கள், சாதுரியமாக செயல்பட்டதால் 18 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.நீலகிரியில் கடந்த 8ம் தேதி தொடர்மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு, மண் சரிவு, உயிர்ச்சேதம் என்று தகவல்கள் வந்த வண்ணமிருந்தன. அதே இரவில், ஊட்டி லவ்டேல் சந்திப்பு அருகிலுள்ள கீழ் காந்தி நகரில் பல இடங்களில் சிறு சிறு அளவில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
அப்போது, இந்த பகுதி நேருயுவகேந்திரா அமைப்பின் கீழ் செயல்படும், குறிஞ்சி மலர்கள் இளைஞர் மன்றத்தினர், இங்குள்ள வீடுகளில் வசித்தவர்களை வெளியேற்றி பள்ளியில் தங்க வைக்க முயற்சித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி மூடப்பட்டிருந்தது. அவர் களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்க வைத்தனர். இவர்கள் அனைவரையும் வெ ளியேற்றிய பின்பே, இந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்றனர்.அன்று இரவு இப்பகுதியிலிருந்த 18 வீடுகளை மண் மூடி முற்றிலுமாகச் சிதைத்து விட்டது. முன்னெச்சரிக்கை உணர்வுடன் இளைஞர்கள் செயல்படாமல் இருந்திருந்தால், அந்த வீடுகளில் இருந்த 45 பேர், உயிரிழந்திருக்கக் கூடும். தற்போது இவர்கள், ஓல்டு ஊட்டியிலுள்ள சமுதாயக் கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாற்று உடைகள் கூட இல்லாததால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இளைஞர் மன்ற தலைவர் தியாகராஜன் கூறுகையில், ""எங்களுக்கு சமுதாயக்கூடத்தில் உணவு, குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளனர். எங்களுக்கு எங்கே, எப்போது வீடுகள் அமைத்துத் தரப்படும் என்பது பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை,'' என்றார். கவுன்சிலர் பத்மாவதி மண்சரிவுக்கு முன்பாக பலரை அங்கிருந்து வெளியேற்ற உதவியுள்ளார்.
---------------------------------------------------------------------------------
இப்படியும் இளைஞர்கள் இருப்பதால்தான் இந்தியாவை அசைக்க முடியாமல் சில நாடுகள் தடுமாறுகின்றன, இந்திய இளைஞர்களை சரியான முறையில் வழிநடத்த ஒரு தன்னலமற்ற தலைமைதான் இப்போதைய நாட்டின் தேவை.
சரியான நேரத்தில், தன்னலம் பாராமல் இந்த இளைஞர்கள் உதவி செய்தது பாராட்டக்குரியது.
தமிழக அரசு இவர்களை சிறப்பாக கௌரவித்து, உற்சாகபடுத்த வேண்டும்.
இவர்கள், ஏன் பண்ற, நம் போன்ற இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி, முன்னுதாரணம்.
நண்பர்களே உங்களை, நன்றியுடன் வாழ்த்தி வணங்குகிறேன்.
இச்செய்தியை வெளியிட்டு பலரும் அறியும்படி செய்த, தினமலர் நாளிதழுக்கும் நன்றி.
0 கருத்துக்கள்:
Post a Comment