பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாய் சொல்ல வேண்டாமா ?



பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாய் சொல்ல வேண்டாமா ?


எம்ஜிஆரை கொச்சைப்படுத்துவதா ? - என்று பார்ட்டைம் அரசியல்வாதி விஜயகாந்து முதல்வர் கலைஞருக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
என்ன விஷயம் ? - லிபரான் அறிக்கை 'கசிந்த'தற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டுமென்று - விஜயகாந்தின் ரகசிய கூட்டாளி ஜெயலலிதா கோரினார்.



"எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் - பால் கமிஷன் அறிக்கையை நானே வெளியிட்டேனே! அப்போது பால் கமிஷன் அறிக்கை வெளிவந்ததற்குப் பொறுப்பேற்று - எம்ஜிஆர் மந்திரிசபையில் யாராவது ராஜினாமா செய்தார்களா ? " - என்று முதல்வர் கலைஞர் கேள்வி எழுப்பினார்.


யோக்கியதன்மையும் - அறிவு நாணயமும் பொருந்திய யாராக இருந்தாலும் கலைஞரின் கேள்விக்கு உரிய பதிலை நேரடியாக சொல்வார்கள். பதில் சொல்ல முடியாதவர்கள் - வாயையும், இன்னொன்றையும் பொத்திக் கொண்டு சும்மா இருப்பார்கள்.


ஜெயலலிதா அப்படிப்பட்டவரா ?. அவர், கலைஞரின் நேரடியாக பதில் சொல்ல வக்கின்றி வகையின்றி, "அன்று அந்த அறிக்கையை வெளியிட்டதற்காக கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்" என்று பிரச்னையை திசைதிருப்பும் வகையில் குயுக்திவாதம் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இப்போது - ' விருத்தகிரி; படத்துக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் விஜயகாந்து 'நானும் அரசியலில் இருக்கிறேன்" என்று காட்டிக்கொள்ள "எம்ஜிஆரைக் கொச்சைப்படுத்துவதா?" என்று ஒரு விதண்டவாத அறிக்கைவிட அதனை ஆர்.எஸ்.எஸ் வைத்தியநாத அய்யர் பரம சந்தோசத்துடன் 'தினமணி'யில் பிரசுரித்து விட்டார்.


லிபரான் கமிஷன் அறிக்கை 'கசிந்த'தற்கே ப.சிண்டம்பரம் ராஜினாமா செய்யவேண்டும் என்றால் - பால் கமிஷம் அறிக்கை முழுவதுமே வெளியிடபட்டதற்க்காக - எம்ஜிஆர் காலத்தில் யாராவது ராஜினாமா செய்தார்களா? - என்று கேட்டால் - அது எப்படி எம்ஜிஆரைக் கொச்சைப் படுத்துவதாகும் ?.


அப்போது - 
எம்ஜிஆர் மந்திரி சபையில் பதவிச்சுகம் அனுபவித்து கொண்டிருந்தவரும் - இப்போது விஜயகாந்துக்கு ஏடாகூட அறிக்கைகள் தயார் செய்து தருபவருமான சகுனி பண்ருட்டி ராமச்சந்திரனிடம் - விஜயகாந்து கேட்டிருக்கலாமே, "அன்று ஏன் ராஜினாமா செய்யவில்லை " என்று.


அதை விட்டுவிட்டு - கலைஞர் மீது பாய்ந்த பிராண்ட வேண்டிய அவசியம் என்ன ?


"பொருளை வாங்குபவர்கள் யாரும் இல்லையென்றால் அதை யாரும் உற்பத்தி செய்யமாட்டாகள்" என்று ஒரு பொருளாதார முத்தை உதிர்த்திருக்கிறார் விஜயகாந்து.


2006 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்து.


பேரரசு
சபரி
தர்மபுரி
நிறைஞ்ச மனசு
அரசாங்கம்
எங்கள் ஆசான்


என்று வதவதவென்று உற்பத்தி செய்யப்பட பொருள்களை - அல்லது படச் சுருள்களை மக்கள் சீந்தவில்லையே - கடைசிப் படம் எங்கள் ஆசானுக்கு தியேட்டரே கிடைக்கவில்லையே திரையிட .
பொருளை வாங்குபவர்கள் யாரும் இல்லையென்றால் அதை யாரும் உற்பத்தி செய்யமாட்டார்கள் என்ற பொருளாதார தத்துவ முத்தின் அடிப்படையில் - விஜயகாந்து படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு - முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டாரா ? மறுபடியும் விருதகிரியை உற்பத்தி செய்ய வெளிநாடுகள் செல்ல மூட்டைக் கட்டிவிட்டாரே !


பொய் சொல்வது விஜயகாந்து போன்ற புதிய வரவுகளுக்கு வழக்கந்தான் - பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாக சொல்லத் தெரிய வேண்டும்.


நன்றி: முரசொலி.

Posted by போவாஸ் | at 3:31 PM

3 கருத்துக்கள்:

Anonymous said...

what is your view about kalainger? he is avery perfect politician!!!????? is it so ?he has most cheater in the issue of srilankan people,he has proved has the best actor in his half day fasting with A/c arangements,,,, yenda ningellam thirunthavee maattingalaa,,karunanithi is as worst as any other politician that's all

அஹோரி said...

உங்க தலைவர் உடுற அம்பது பக்க அறிக்கையை பாதி படிச்சிட்டு , மண்ட கொழம்பி திரியரான்களே ... அத நிறுத்த சொல்லுங்க. விஜயகாந்த் நிறுத்துவார்.
கேள்வி - பதில் அறிக்கை படிச்சிட்டு , மக்கள் அடுத்த ஸ்டேட்க்கு குடும்பத்தோட ஓடுறாங்களே ... அத நிறுத்த சொல்லுங்க. விஜயகாந்த் நிறுத்துவார்.

போவாஸ் said...

அஹோரிக்கு, விஜயகாந்து மாதிரியே நீங்களும் பஞ்ச் டயலாக்கு பேசுறதுல கில்லாடி போல. வருகைக்கு நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails