மேலும் ஒரு செக்ஸ் அர்ச்சகன் சிக்கினான்
காஞ்சிபுரத்தில் செக்ஸ் அர்ச்சகன் தேவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னொரு அர்ச்சகனும் சிக்கி உள்ளான்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதாக அர்ச்சகன் தேவநாதன் மீது சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். அர்ச்சகன் தேவநாதனை சிவகாஞ்சி காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. தேவநாதன் கோவில் கருவறையிலும், காஞ்சிபுரத்தில் முக்கிய விடுதிகளிலும், மருத்துவமனையிலும் பல வி.அய்.பி. பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளான்.
கருவறையில் விபச்சாரம்
கோவில் கருவறையில் விபச்சார பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துவிட்டு அங்கேயே பணத்தை கொடுத்துள்ளான். காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தேவநாதன் தன்னை மயக்க சாக்லெட் கொடுத்து கற்பழித்து விட்டதாகவும், அதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பலமுறை தன்னை கோவிலின் கருவறையில் வைத்து உல்லாசம் அனுபவித்ததாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
அதன் அடிப்படையில் காவல்துறையினர் அர்ச்சகன் தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கை புதிதாக சேர்த்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அர்ச்சகன் தேவநாதன் செக்ஸ் லீலைகளில் மேலும் ஒரு அர்ச்சகனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிர விசாரணையில் அர்ச்சகன் தேவநாதனின் நெருங்கிய நண்பர்களுக்கும் (பெயர் வெளியிடவில்லை) தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவன் வேறு ஒரு கோவிலில் அர்ச்சகனாக வேலை செய்து வருகிறான். தேவநாதன் கோவில் கருவறையில் பெண்களுடன் எடுத்த செக்ஸ் லீலை காட்சிகளை நண்பனுக்கு முதலில் காட்டுவானாம்.
அவன் கொடுத்த உற்சாகம்தான் தேவநாதன் மேலும் மேலும் தவறுகள் செய்ய தூண்டுகோலாக இருந்துள்ளது. அர்ச்சகன் தேவநாதனுக்கும், அவரது நண்பனுக்கும் எந்த அளவுக்கு தொடர்பு உள்ளது என காவல்துறை வட்டாரம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது. அவனை இந்த வழக்கில் சேர்த்த பின்பு மேலும் அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
1 கருத்துக்கள்:
In london Hindu priest’s rape conviction was ‘unsafe’, court hears
follow the link
http://www.thisislocallondon.co.uk/news/topstories/633533.hindu_priests_rape_conviction_was_unsafe_court_hears/
Post a Comment