ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் !!!


சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில், ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில், மலர் முழுக்கு நடந்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேய சிலை உள்ளது. 


ஆஞ்சநேய ஜெயந்தியை ஒட்டி இங்கு அதிகாலையில் கணபதி ஹோமம், அதை தொடர்ந்து ராமபிரானுக்கு சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து 7.30 மணிக்கு பால், தயிர், விபூதி, குங்குமம், இளநீர், களபம், பஞ்சாமிர்தம், மாதுளை, சந்தனம், எலுமிச்சை, பன்னீர், தேன் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. 10 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, மாலையில் மலர் முழுக்கு விழா நடந்தது.
-----------------------------------------------------------------
கல்லினாலும், மண்ணினாலும் செய்யப்பட ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் பண்றதே ஒரு வேஸ்ட்டான காரியம். அதுக்காக 10,000 லிட்டர் பால் எல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியல.
General India news in detail

எத்தனையோ பாவப்பட்ட ஏழை மக்கள் ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாம கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு கொடுத்து இருக்கலாம். வெறும் கல்லும் மண்ணுமாக இருக்கும் எந்த சுவாமியும் தவறாக எடுத்துக் கொள்ளாதே.


இன்னைக்கு தேதிக்கு ஒரு லிட்டர் பாலின் விலை 23. 10,000 லிட்டர் பாலுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வீணாக்கப் பட்டுள்ளது.


பாலில் மட்டும் இவ்வளவு என்றால்....தயிர், விபூதி, குங்குமம், இளநீர், களபம், பஞ்சாமிர்தம், மாதுளை, சந்தனம், எலுமிச்சை, பன்னீர், தேன் உட்பட 16 வகையான அபிஷேகம் நடத்தியதில்...குறைந்தபட்சம் ஒரு பத்து லட்சமாவாது செலவிடப் பட்டிருக்கும் என்றே தெரிகிறது.


இவ்வளவு செலவு தேவைதானா இது..? 


இதற்கான செலவினைக் கொண்டு, படிப்பதற்கு வசதியில்லாமல் கஷ்டப்படும் ஒரு பத்து மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றிருந்தால்....ஒரு சிறந்த சமுதாயத்தினை உருவாக்கியிருக்க முடியும். பிறருக்கு எடுத்துக்காட்டாக இருந்து...பலரும் பின்பற்றக் கூடிய வாய்ப்பு உருவாகியிருக்கும்.


உடுக்க உடையில்லாதோருக்கு உடைகளைக் கொடுத்திருக்கலாம்.


மருத்துவ உதவி, இருப்பிட உதவி, திருமண உதவி என இன்னும் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ...அவைகளைச் செய்திருக்கலாம்.


ஆஞ்சநேயருக்கு பாலும், தேனும், தயிரும் ஊற்றி அபிஷேகம் பன்னபட்டதால் சாக்கடையில் கலந்து மேலும் கழிவு நீரை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பிரயோஜனம் இருந்திருக்க முடியும் ?.


கஷ்டப்பட்டு, வேர்வை சிந்தி உழைச்சு, சேமிச்சு வச்ச பணத்தை குப்பையில யாராவது தூக்கி போடுவாங்களா ?. புத்தியுள்ளவர்கள் செய்வார்களா ?. 


அதுபோலவே, கல்லால், மண்ணால் செய்த ஆஞ்சநேயர் சிலை மீது செய்த அபிஷேகமும்....வெட்டாந்தரைல வீணாய் கொட்டுவதும் ஒண்ணுதான்.

சிந்தியுங்கள்...சிறப்பாய் இருங்கள்...சமுதாயத்தை மாற்றுங்கள்.

Posted by போவாஸ் | at 1:44 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails