ஆண்டவன் உத்தரவு : கோவிலில் 500 ரூபாய் வைத்து பூஜை


உலகில் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பு, திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோவிலுக்கு உண்டு. இங்கு மூலவராக வீற்றிருக்கும் ஸ்வாமி சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் தோன்றி கூறும் பொருட்களை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டியில் வைத்து, அதற்கு தினமும் சிறப்பு பூஜை நடத்துவது தொற்றுதொட்டு நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டம் வெள்ளோடு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "500 ரூபாய் பணத்தை வைத்து பூஜிக்குமாறு' உத்தரவிட்டுள்ளார்.
Human Intrest detail news
இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி திருக்கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். முறைப்படி மூலவர் சன்னதியில் பூ மூலம் உத்தரவு கேட்கப்பட்டது. பூ உத்தரவு கிடைத்ததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 500 ரூபாய் பணத்தை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைத்து தினமும் பூஜை நடக்கிறது.
இதன்மூலம் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர்.


கடைசியாக இக்கோவிலில் வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை நடந்தது. இதனால், நாடெங்கும் சுபகாரியங்கள் அதிகம் நடந்தன. அதற்கு முன் விபூதி வைத்து பூஜை நடந்தது. அப்போது நாட்டில் அதிகப்படியான கோவில்களில் குடமுழுக்கு நடந்தது; மக்களிடம் ஆன்மிக ஈடுபாடும் அதிகரித்தது.
Hotel image
அதற்கு முன், மண்ணை வைத்து பூஜை நடந்த போது, ரியல் எஸ்டேட் தொழில் செழித்து, பூமி விலை பல மடங்கு அதிகரித்தது. அதற்கு முன் ஒரு படி அரிசியும், நூறு ரூபாய் பணமும் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது.


இக்கோவிலில் துப்பாக்கியை வைத்து பூஜித்தபோதுதான் கார்கில் யுத்தம் துவங்கி; அது வெற்றியில் முடிந்தது.தற்போது 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடப்பதால், அன்னிய செலவாணி பல மடங்கு உயர்வு ஏற்பட்டு, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமென சிவன்மலை முருக பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
-----------------------------------------------------------
மண்ணை வைத்து பூஜை நடந்த போது, ரியல் எஸ்டேட் தொழில் செழித்து, பூமி விலை பல மடங்கு அதிகரித்தது. அதற்கு முன் ஒரு படி அரிசியும், நூறு ரூபாய் பணமும் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது.
இப்போ 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடத்துகிறார்கள்....அரிசி விலை இன்னமும் விலை எறக் கூடுமா ?.


என்று திருந்தப் போகிறது இந்த அறிவு மங்கிய சமுதாயம்.......?


ஆண்டவன் உத்தரவாம்,,ஆண்டவன் உத்தரவு.....என்னத்த சொல்றது போங்க.

Posted by போவாஸ் | at 1:07 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails