உங்கள் குழந்தையும் 100-க்கு 100 வாங்க வேண்டுமா ?


“என் புள்ளதான் ஸ்கூல்ல பர்ஸ்ட் மார்க்’’ என்று சொல்ல எந்தப் பெற்றோரும் தயங்குவதில்லை. ஆனால் எவ்வளவு படித்தாலும் மனதில் பதியாத குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளி வாழ்க்கையே சிறைக்கூடமாக தோன்றும்.
பொதுவாக ஒவ்வொருவரும் வேறுபடுவது மூளைத்திறனில்தான். சிலர் அதிகமாக பயன்படுத்தி அதன் திறனை வளர்த்துக் கொள்வார்கள். சிலர் பயன்படுத்தாமலே மழுங்கட்டையாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் பிறவி நோயால் பாதிக்கப்பட்டு எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருப்பார்கள்.


இப்படி பிறப்பிலேயே வரும் மூளைப் பாதிப்பில் ஒன்று ‘டவுன் சிண்ட்ரோம்’ வியாதி. இதேபோல் அல்சீமர் போன்ற பல மூளைத்திறன் பாதிப்பு வியாதிகள் நிறைய இருக்கின்றன. இவைகளுக்கு தீர்வு காண புதிய மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதை பரிசோதித்துப் பார்த்ததில் வெற்றி கிடைத்து உள்ளது.
டவுன்சிண்ட்ரோம் பாதிப்பு 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களின் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இங்கிலாந்தில் 750 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இவர்களின் உடல் வளர்ச்சி மற்ற குழந்தைகள் போல இருந்தாலும் மூளைவளர்ச்சி மட்டும் 2 வயது பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்.
இந்த குறைவை சரிப்படுத்தி இயல்பான குழந்தைகளைப் போலவே செயல்பட உதவுகிறது இந்த புதிய மருந்து. இதன் பெயர் எல்டோப்ஸ் எனப்படும். இதை கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.
பரிசோதனைக்காக எலிகளில் செயற்கையாக டவுன்சிண்ட்ரோம் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டது. பிறகு எல்டோப்ஸ் மருந்து கொடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மூளையின் செயல்பாட்டுக்கு தேவையான நார்பின்பிரைன் என்ற வேதிப்பொருள் கிடைக்க எல்டோப்ஸ் துணைபுரிந்தது. இதனால் நாளடைவில் பாதிப்பு உடைய எலி, இயல்பான எலிகள்போல செயல்படத் தொடங்கியது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எதிர்காலத்தில் டவுன் சிண்ட்ரோம் உள்பட பல்வேறு டிஸ்ஆர்டர்களுக்கு ‘எல் டோப்ஸ்’ பயன்படுத்தபடும் என்று தெரிகிறது.

Posted by போவாஸ் | at 8:39 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails