இந்தியாவின் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள 20 தொழிற்பேட்டைகளில் 3 தமிழகத்தில்



அதிகாரபூர்வ அரசாங்க அறிவிப்பின் படி இந்தியாவில் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள 20 தொழிற்பேட்டைகளில் 3 தமிழகத்தில் உள்ளது. அவ்வறிக்கையின் படி இந்தியாவில் அதிக மாசுபடுத்தப்பட்டுள்ள தொழில் பகுதிகளில் வேலூர், கடலூர், சென்னை புறநகர் பகுதியான மணலி ஆகியவை முறையே 8,16,20 வது இடத்தை பிடித்துள்ளன.


ஐஐடி டெல்லி, மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுபாடு வாரியங்களின் உதவியுடன் இவ்வறிக்கையை தயாரித்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 88 தொழிற்பேட்டைகளில் 85 சதவிகிதம், 75 தொழிற்பேட்டைகள் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ளன. முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் குஜராத்தில் உள்ள அங்கலேஸ்வர் மற்றும் வாபி ஆகியவை தான் இந்தியாவிலேயே அதிக மாசுபடுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர், திருப்பூர், மேட்டூரும் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள பட்டியலில் இடம் பிடித்துள்ளன. ஈரோட்டில் மட்டுமே மாசு அரசாங்கம் நிர்ணயித்த வரம்புக்குள் உள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது. இவ்விபரங்களை பாராளுமன்றத்தில் வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மாசு கட்டுப்படுத்தப்படும் வரை இப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் கட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ள தமிழக தொழிற்பேட்டைகள்
தரவரிசை
தொழிற்பேட்டை
மாசு-காற்றில்
மாசு-தண்ணீரில்
மாசு-நிலத்தில்
8
வேலூர்
அபாய அளவு
அபாய அளவு
அபாய அளவு
16
கடலூர்
அதிக மாசு
அபாய அளவு
அபாய அளவு
20
மணலி
அபாய அளவு
அதிக மாசு
அதிக மாசு
34
கோவை
அபாய அளவு
அதிக மாசு
வரம்புக்குள்
51
திருப்பூர்
அதிக மாசு
அதிக மாசு
அதிக மாசு
56
மேட்டூர்
வரம்புக்குள்
அதிக மாசு
வரம்புக்குள்
78
ஈரோடு
வரம்புக்குள்
வரம்புக்குள்
வரம்புக்குள்




Posted by போவாஸ் | at 8:37 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails