ஐயப்பன் - "பவர்" இல்லாத அப்பன் ?

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த சில நாட்களாக சபரிமலையில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சபரிமலை விழா சமயத்தில் பலத்த போலீஸ் காவல் இருக்கும் என்று கேரள அரசு அறிவித்த பிறகும், போலீஸ் துறையின் பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பது பக்தர்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.மொத்தத்தில் கோடிக்கணக்கான மக்கள் வழிபாடு செய்யும் முக்கிய இந்துத் திருவிழாவான சபரிமலையில் இந்துக்களை பயமுறுத்துவதற்காகவும், மக்களை சபரிமலை வரவிடாமல் தடுப்பதற்காகவும், அரசு எந்திரங்களுக்கு சவால் விடுவதற்காகவும் தான் பயங்கரவாதிகள் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பக்தர்களை காக்க வேண்டிய பொறுப்பு மாநில, மத்திய அரசின் கைகளில் உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போலீஸ் துறை இணைந்து செயல்பட வேண்டியதும் அவசியம் ஆகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து பக்தர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.
நன்றி:நக்கீரன்.
--------------------------------
இதை படித்துவிட்டு மக்களின் அறியாமையை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.


" பக்தர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில, மத்திய அரசின் கைகளில் உள்ளது " - என்று கூறுவதிலிருந்தே அவர்களுக்கே ஐயப்பனின் மீது நம்பிக்கையில்லை என்ற உண்மை புலனாகிறது.


" மத்திய மாநில அரசுகள் இணைந்து பக்தர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி " என்பதின் மூலம்...உண்மை இல்லாதவற்றை உண்மை என்று மக்களிடத்தில் கூறி நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது. 


மக்களிடத்தில் இன்னும் அதே பொய்யான நம்பிக்கையை வளர்க்க மத்திய மாநில அரசுகளின் அதிகாரத்தை நாடுகின்றனர்.ஐயப்பன் இருக்கும் சபரிமலையில் தொடர் குண்டு வெடிப்புகள் மூலம்..., ஐயப்பன் வெறும் கல் என்பதும், ஐயப்பனின் கதை ஒரு கட்டுக்கதை என்கிற உண்மையும், மக்களின் மனதில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு போலியான மோசமான மூடநம்பிக்கை என்று தெரியவருகிறது.


ஐயப்பன் - "பவர்" இல்லாத அப்பன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


அறியாமையைப் போக்குங்கள். அறிவுடன் பகுத்தறிவையும் சேர்த்து வளர்த்துக் கொள்ளுங்கள். உண்மையை உணருங்கள். பிறருக்கும்  தெரிவியுங்கள்.

Posted by போவாஸ் | at 3:22 PM

5 கருத்துக்கள்:

Anonymous said...

vendam unakku nallathillai.

chiyaan said...

nee moodu

sameya saranam iyappa

Anonymous said...

sir,

indhamathiri bom vaikiravargalai thundividuvathu araseal vathigale thavira, andavan illai, adhanal kadvula kurai sollathinga sir. avar avalavu sakthi ulla theivam yenpathanal than makkal uyerukku yethuvum agavillai....

Anonymous said...

pakkutharivuna yenna sir? adhukku mudhalel thelivana pathel sollunga. pakutharivala yellamea sathithu vidalam yendral pakutharivu pakutharivu yendur sollupavargal yella muyarchielum vettri adainthu iruppargal, apadi ungalukku idhuvaraikkum tholiviyea vandhathu illai yendral kadvul illai yendru neengal solvathia othukolkiren.

Sivamjothi said...

திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று

Post a Comment

Related Posts with Thumbnails