விஜயகாந்து கட்சி வெற்றி பெற என்ன வழி ?.

திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிவுகள் ஜனநாயக முறைக்கு எதிரானது. எந்த ஊழலை ஒழிக்கப் பாடுபடுகிரோமோ அந்த ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் இந்த இடைத் தேர்தலை ரத்துச் செய்திருக்கவேண்டும்.


எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்துச் செய்யவேண்டும். அப்போதுதான் நேர்மையாக தேர்தல் நடைபெறும்.
- என்று டைம்பாஸ் அரசியல்வாதி விஜயகாந்து தனது படுதோல்விக்குப் பட்டுத்திரை போட்டு மூட முயன்றிருக்கிறார்.


திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய இரு தொகுதிகளிலும் விஜயகாந்து கட்சி டெபாசிட் தொகையை இழந்துள்ளது என்பதோடு, சென்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளைக் கூட இந்தத் தேர்தலில் வாங்க முடியவில்லை.


1 ) திருசெந்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் 3756 வாக்குகளை இவரது கட்சி வாங்கியது.
இந்தத் தேர்தலிலோ - 
கை சுத்தம் 
அதைவிட 
வாய் சுத்தம் 
மணக்கும் 
வாயோடு தொகுதியை வளம் வந்தார் விஜயகாந்து. எனினும் இந்தத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 4186. சென்ற தேர்தலைவிட, 430 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று டெபாசிட்டை இழந்திருக்கிறது அவரது கட்சி.


2) வந்தவாசி தொகுதியில் கடந்த தேர்தலில் விஜயகாந்து கட்சி பெற்ற வாக்குகள் மொத்தம் 9096.
இந்தத் தேர்தலிலோ 7063 தான்.


போன தேர்தலில் விஜயகாந்து கட்சிக்கு வாக்களித்த 2033 பேர் "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்பது போல விஜயகாந்து கட்சியைக் கை கழுவி விட்டார்கள். 9 ஆய்ரமாக இருந்தால்தான் என்ன ? இரண்டு தேர்தலிலும் டெபாசிட் என்னவோ காலிதான்.
viruthagiri Movie Stills

மற்றபடி - எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்து செய்யவேண்டும். அப்போதுதான் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்கிறார்.


இதற்கு உண்மையான அர்த்தம் என்ன ?


4 ஆயிரம் ஓட்டும், 7 ஆயிரம் ஓட்டும் பெற்று டெபாசிட் இழக்கும் விஜயகாந்து கட்சியே வெற்றி பெற்றது என்று அறிவிக்கும் வரையில் தேர்தலை ரத்து செய்யவேண்டும்.


நமது அரசியல் சட்டப்படி - அது முடியுமா ?


டெபாசிட் இழந்த கட்சியைத்தான் வெற்றி பெற்ற கட்சி என்று அறிவிக்க தேர்தலி சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வர பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன பைத்தியக்காரர்களா ?.

Posted by போவாஸ் | at 6:33 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails