பாடையில போகுற வயசுல...படுக்கையறை உல்லாசம்.

ஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி, ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் இருப்பது போன்ற டிவி வீடியோ படத்தால் அங்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கவர்னர் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் மட்டுமின்றி டெல்லியிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏபிஎன் ஆந்திரஜோதி என்ற தனியார் தொலைக்காட்சி சானல் இந்த செய்தியை வீடியோவுடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில ஆளுநராக இருப்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி எனப்படும் நாராயண் தத் திவாரி. இவர் உ.பி. முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராகவும் இருந்தவர்.
ஏற்கனவே தெலுங்கானா காரணமாக கொதிப்பில் இருக்கும் ஆந்திராவில் திவாரி பிரச்சினை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா பிரச்சினையால் முடங்கிப் போய்க் கிடந்த தெலுங்கு தேசம் கட்சி, திவாரிப் பிரச்சினையை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளது.

நேற்று காலை இந்த வீடியோ செய்தி வெளியானதைத் தொடர்ந்து ராஜ்பவன் நோக்கி பெண்கள் அமைப்பினர், தெலுங்கு தேசம் கட்சியினர் படையெடுத்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பெண்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

திவாரி குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த ராஜ்பவன் உடனடியாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அதில் ஆந்திர ஜோதி டிவியில் காட்டப்படுவது திரிக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான காட்சிகள். ஆளுநரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து படு வேகமாக செயல்பட்ட ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த செய்தியை ஒளிபரப்பவும், வீடியோவைக் காட்டவும் ஆந்திர ஜோதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆந்திர ஜோதி வீடியோ படத்தைக் காட்டுவதை நிறுத்தியது.

அந்தக் காட்சி...

ராஜ்பவன் மாளிகையின் படுக்கை அறையில் இந்தக் காட்சி விரிகிறது. இரவு நேரத்தில் இது படமாக்கப்பட்டுள்ளது. என்.டி.திவாரி படுக்கை அறையில் உட்கார்ந்துள்ளார். அவருக்கு அருகில் 3 பெண்கள் உள்ளனர்.
மனு கொடுக்க வந்த
 
 பிரபல நடிகை-பெண்களை
 
 கவர்னர் கட்டி அணைத்தார்;
 
 விபசார பெண்கள் பரபரப்பு...
அவர்களில் ஒரு பெண்ணுக்கு 18 வயது என்று கூறப்படுகிறது. திவாரியின் வயது 87 ஆகும். இன்னொரு பெண் கர்ப்பிணி என்று கூறப்படுகிறது.

அம்பலப்படுத்திய ராதிகா...

திவாரியின் இந்த செக்ஸ் ஊழலை அம்பலப்படுத்தியவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆவார்.

ராஜ் பவன் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் திவாரிக்காக தான் இந்தப் பெண்களை அனுப்பி வைத்ததாக அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், திவாரிக்கு பெண் மோகம் அதிகம். அவருக்காக நான் பல பெண்களை அனுப்பி வைத்துள்ளேன். அனைவரும் ராஜ்பவன் வேலைக்காக என்று கூறி சேர்க்கப்படுவர். ஆனால் அவர்களை திவாரிதான் தனது இச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.

எந்த நேரத்தில் அவர் பெண் வேண்டும் என்று கேட்பார் எனக் கணிக்கவே முடியாது. திடீரென நள்ளிரவில் கேட்பார், சில சமயம் மதிய உணவை முடித்ததும் கேட்பார்.

எனக்கு கடப்பாவில் சில கல்குவாரிகளை நடத்த விருப்பம் இருந்தது. இதற்காக லைசென்ஸ் வாங்கித் தருவதாக திவாரி உறுதியளித்திருந்தார். ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. இதையடுத்தே இந்த வீடியோ படத்தை அம்பலப்படுத்தி ஆந்திரஜோதிக்குக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் ராதிகா.

டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - நாயுடு

திவாரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரஜோதி டிவியில் காட்டிய காட்சிகள் மிகவும் அசிங்கமானவை, ராஜ்பவனுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் திவாரி. ஆந்திராவுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்து விட்டார்.

அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதேபோல திவாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு மகளிர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. அதுவரை போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவை கூறியுள்ளன.

திவாரிக்கு எதிராக சித்தூர், நெல்லூர், கம்மம், அடிலாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், அம்மாநில கவர்னர் மீது எழுந்துள்ள செக்ஸ் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்தால் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட ஒரு திறமையான, முழுநேரம் பணியாற்றக்கூடிய தலைவர் தேவை. 86 வயதான என்.டி.திவாரி அதற்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று ஏற்கனவே காங்கிரஸ் மேலிடம் கருதியது. இந்தநிலையில் திவாரி மீது புகார் வந்துள்ளதால் புதிய கவர்னரை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு ஆளாகியுள்ளது. 
--------------------------------------------
பாடையில போற வயசுல....படுக்கையறையில் பெண்களுடனும், விபச்சார அழகிகளுடனும் உல்லாசம்.
ச்..சி..சீ.. கேவலம். ஷிட் .

மன்மோகன் சிங் : இந்த வயசுலயும், எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் பண்ண முடியுது ?.
என்.டி.திவாரி: அய்யே..ரொம்ப புகழாதீங்க. இதுகெல்லாம் போயி கையெடுத்து கும்டுகிட்டு. ராஜ் பவனுக்கு வாங்க விவரமா சொல்லித்தாரேன்.
மன்மோகன் சிங் : ??????????

Posted by போவாஸ் | at 4:20 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails