கட்சி ஊழல்களையே கேப்டனால கட்டுபடுத்த முடியல.!!!

" கேப்டன் கட்சி ஆரமிச்ச புதுசுல, 'நான் ஊழல் செஞ்ச பணத்துல கட்சி ஆரம்பிக்கலை, ஏன் சொந்த பணத்தைப் போட்டுதான் கட்சி நடத்துறேன். நான் பாடுபட்டு சம்பாதிச்ச சொத்துக்களைக் கூட இழந்திருக்கேன்'னு அடிக்கடி சொல்வார்.

ஆனா, இப்போ தேமுதிக-வுக்குள்ள நடக்கற சில ஊழல்களையே கேப்டனால கட்டுபடுத்த முடியல. தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மாவட்டங்களிலும் கட்சி பொறுப்புகள் விலை பேசி விற்கப்படுவதாக தகவல் பரவியுள்ளது.


இப்படி பதவிக்கு பணம் வாங்குராங்கலேன்னு மாவட்டச் செயலாளர்களையோ, பொறுப்பாளர்களையோ மட்டும் குறை சொல்ல முடியாது. ஏன்னா, கட்சித் தலைமைக்கான தேர்தல் செலவுக்கு இவர்களும் தங்களைத் தயார்படுத்திக்க வேண்டியிருக்கு.மாநாடு, பேரணி ஏன் அறிவிக்கும்போது மாவட்ட செயலாளர்களிடமும் லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்கிறது தலைமை.


இதற்கிடையில், திமுக அரசு பக்காவாகத் திட்டமிட்டு பல கட்சிகளில் இருந்தும் இளைஞர்களை இழுக்க ஆரம்பித்த பிறகு, தேமுதிகவுக்கு புதிதாக வருகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் முன்பு போல் இல்லை. வேற கட்சிகளில் இருந்துவிட்டு இப்ப ஆதரவில்லாமல் உள்ள சில ஊழல் அரசியல்வாதிகள்தான் அதிகம் வாறாங்க."


நன்றி: ஜூனியர் விகடன்.
--------------------------------------
மக்களே சிந்திங்க...கட்சிகுள்ளாரையே ஊழலை ஒழிக்க முடியாத இவர்....,ஊழலை ஒழிப்பேன்னு ஒழிப்பேன்னு வாய் கிழிய பேசுவது மக்களிடம் ஓட்டுக்களைப் பெற ஒரு ஏமாற்றுப் பேச்சு என்று.


விஜயகாந்துக்கு உண்மையிலேயே ஊழலை ஒழிக்க ஆசை என்றால்...முதலில் பண்ரூட்டி ராமச்சந்திரனை கட்சியில இருந்து நீக்கியிருக்க வேண்டும். எம்ஜிஆர் ஆட்சியின் போதே ஊழல் செய்ததற்கான குற்றச்சாட்டு அவர் மேல் உண்டு. 


விஜயகாந்து பின்னாடி,அவரை நம்பி கட்சியில சேர்ந்து கைகாசப் போட்டு...தேர்தலுக்கும், பேரணி, மாநாடு, ஆர்ப்பாட்டங்களுக்கும், பணத்தை தண்ணிபோல செலவு செய்துவிட்டு பின்னர் புலம்பாமல், முன்ஜாக்கிரதையோடு இருப்பது நல்லது. வீணா செலவு பண்ணுற காசுல நாலு பிள்ளைங்கள படிக்க வச்சா...வம்சம் முழுக்க பேரு சொல்லும்...இல்லைனா ஏதாவது ஒரு அனாதையில்லதுக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுங்கப்பா...புண்ணியமாவது கிடைக்கும்.
viruthagiri Movie Stills
படம் எடுக்க டைரக்டருமில்லை. 
கூட நடிக்க நடிகையுமில்லை.
படத்தினை வாங்க விநியோகஸ்தருமில்லை. 
படம் திரையிட தியேட்டருமில்லை. 
படத்தை பார்க்க ஜனங்களும் தயாரில்லை 


என்கிற உண்மை நிலையிலும் இவ்வளவு தைரியமா இவர் டைரக்ட் பண்ணி நடிச்சு படம் எடுக்குறதே...வருமான வரி கணக்கு காட்டதான்னு ஊருக்குள்ள பேசிகிறாங்க....இது எவ்ளோ உண்மையோ தெரியலை..ஆனா உண்மையா இருக்குமோன்னு மனசுக்கு படுது.

Posted by போவாஸ் | at 1:50 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails