93 விழுக்காடு இந்தியர்கள் தூக்கத்தை இழந்துவிட்டனர்: ஆய்வுத் தகவல்


பெரும்பாலான இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்களும், தொழில் முனைவோரும் தூக்கம் இன்மையுடன் தொடர்புடைய இடர்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று பிலிப்ஸ் ஹெல்த் கேர் நிறுவனம் வெளியிட்டு உள்ள ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[bxp52648.jpg]

வளமான உடல் நலத்துக்கு எட்டுமணி நேர உறக்கம் தேவை. எட்டு மணி நேரம் பணி, எட்டுமணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் என்பது மனிதனுக்கு வகுக்கப்பட்ட நியதியாகும். ஆனால், பணம் ஒன்றே அனைத்தும் என்ற இலக்கோடு வேகமாக இயங்கி வரும் இன்றைய உலகில், எட்டு மணி நேர உறக்கம் என்பதே இயலாததாக ஆகிவிட்டது.
உறக்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், தூக்கமின்மையால் உடல் நலம் பாதிக்கப்படுவது கவனிக்கப்படாமல் விட்டுவிடப்படுகிறது. 2009 நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் அய்ந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழும் 35 முதல் 65 வயதுக்கு உட்பட்ட 5600 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் இந்த ஆய்விலிருந்து விலக்கப்பட்டனர். எஞ்சியவர்களில் 93 விழுக்காட்டினர் தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 58 விழுக்காட்டினர் இத்தகைய தூக்கமின்மையால் தங்களின் பணி பாதிக்கப்படுவதாகக் கூறினர். பணி நேரத்தில் தூங்கிவிடுவதைத் தவிர்க்க 11 விழுக்காட்டினர் விடுப்பு எடுக்கின்றனர்.
தூக்கமின்மையும், வேலையில் கவனமின்மையும் இணைவதால் ஏற்படும் அலை பாயும் மனநிலை குடும்ப உறவுகளைப் பாதிப்பதாகக் கூறினர். 74 விழுக்காட்டினர் தூங்கும் நேரங்களில் இரைச்சலாலும், இயற்கை அழைப்புகளாலும் தூக்கம் கலைகின்ற-னர். 62 விழுக்காட்டினர் குரட்டை போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். குரட்டை விடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய்களின் ஆபத்து உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.
நல்ல உறக்கம் இல்லாததால் உடல் நலிவடைவதை 87 விழுக்காட்-டினர் உணர்ந்தாலும், 2 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவர்களை அணுகுகின்றனர்; மற்றவர்கள் அதைப் பொருட்படுத்துவதேயில்லை.

Posted by போவாஸ் | at 10:11 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails