தேர்தல் முடிந்ததும் கொடநாடு..ஸ்டாலின்

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது புதியதாக 'ஜெயலலிதா புளுகு' என்றும் சேர்த்துக் கொள்ளலாம் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.





வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் ஸ்டாலின் பேசுகையில்,



முன்னாள் முதல்வர், இன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவைப்போல் மக்களைப் புறக்கணிப்பவர்கள் நாங்கள் அல்ல.


தேர்தல் நேரங்களில் மட்டுமே அவருக்கு மக்கள் நினைவுக்கு வருவார்கள். தேர்தல் வந்தால் மட்டுமே உங்களை சந்திக்க அவப் வருவார்.

திமுகவினரும், முதல்வர் கருணாநிதியும் எப்போதும் மக்களுடளுடன் மக்களாக இருப்பவர்கள்.


இப்போது வந்தவாசி இடைத்தேர்தலுக்காக மக்களை சந்திக்க வந்த ஜெயலலிதா, தேர்தல் முடிந்த பிறகு கொடநாட்டிற்கு சென்று விடுவார். அங்கே அவர் இருப்பது ஓய்விற்கா? ஆய்விற்கா? அது நமக்கு தெரியாது.


ஆனால் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து ஓயாமல் செயல்படுபவர், கருணாநிதி.


ஆட்சியில் இருந்தால் திட்டங்கள் தீட்டுவோம். எதிர்கட்சியாக இருந்தால் போராட்டம் நடத்துவோம் என்கிறார். ஜெயலலிதா எங்கே இருந்து போராட்டம் நடத்துவார்? கொடநாட்டிலா?.


வந்தவாசி வறண்டவாசியாக உள்ளது என்கிறார் 'சுகவாசி' ஜெயலலிதா. கடந்த 3 ஆண்டுகளில் வந்தவாசி நகராட்சி பகுதியில் சுமார் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சாலை, மழைநீர் வடிகால், நவீன கழிப்பிடங்கள், மருத்துவமனை மேம்பாட்டு பணிகள் என்று பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி விரைவில் தொடங்க நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வந்தவாசி தொகுதி விரைவில் 'வளர்ந்த வாசி'யாக மாறும்.


10 வருடம் முதல்வராக இருந்த ஜெயலலிதா வந்தவாசி பற்றி நினைத்தாவது பார்த்திருப்பாரா?. இந்த ஊர் மக்களைப் பற்றி எப்போதாவது நினைத்திருப்பாரா?. தமிழ்நாட்டை பற்றியே கவலைப்படாத ஜெயலலிதா வந்தவாசியைப் பற்றியா கவலைப்படுவார்?.


இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை நான் தான் வழங்கினேன் என்ற ஒரு அபாண்டமான பொய்யை இங்கு அவிழ்த்து விட்டிருக்கிறார் ஜெயலலிதா.


அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது புதியதாக 'ஜெயலலிதா புளுகு' என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.


இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு, உலமாக்களுக்கு நலவாரியம் என இஸ்லாமியர்களுக்கு பல சலுகைகளை வழங்கியவர் கருணாநிதி.


ஜெயலலிதாவால் தனது ஆட்சியில் சாதனையாகவும் எதையும் கூற முடியவில்லை. திமுக அரசின் சாதனை திட்டங்களை குறை கூறவும் முடியவில்லை என்பதால் புழுவாய் துடிக்கிறார் என்றார் ஸ்டாலின்.

Posted by போவாஸ் | at 1:03 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails