இந்தியாவில் முதன்முறையாக கருணைக்கொலைக்கு உச்சநீதிமன்றம்அனுமதி
மூளைச்சாவு அடைந்த ஒரு பெண்மணி மரணத்தை தழுவிக் கொள்ள உச்சநீதிமன்-றம் அனுமதி அளித்துள்ளது.
அருணா சான்பெக், மும்பையைச் சார்ந்த ஒரு செவிலியர் 1973-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கோரச் சம்பவம் அவருடைய வாழ்க்கையை சிதைத்தது. ஒரு காமுகனால் சீரழிக்கப்பட்டதுடன் அவருடைய மூளையும் இந்த சம்பவத்தினால் செயலிழந்தது. கடந்த 36 ஆண்டுகளாக எந்தவித உணர்வும் இல்லாமல் இருக்கிறார் அருணா.
இவரைப்பற்றி புத்தகம் எழுதிய பிங்கி விரானி என்ற பத்திரிகையாளர் எந்தவித உணர்வும் இல்லாமல் ஒரு காய்கறியைப்போல இருக்கும் அருணாவை கருணைக் கொலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தார். மருத்துவமனை மற்றும் மகாராட்டிர மாநில அரசிடம் அருணா பற்றிய மருத்துவ தகவல்களை தருமாறு நீதிமன்றம் கேட்டு பெற்றது.
கடந்த 1973 ஆம் ஆண்டுமுதல் உணர்வில்லாத நிலையில் இருக்கும் அருணாவை கருணைக் கொலை செய்யலாம் என நேற்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரு-ணைக் கொலை சம்பந்தமாக உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
0 கருத்துக்கள்:
Post a Comment