வேட்டைக்காரன் ஸ்பெஷல் - ஏம்பா, அந்த பையன போட்டு இந்த அடி அடிக்கிறாங்க.

"ஏம்பா, அந்த பையன போட்டு இந்த அடி அடிக்கிறாங்க.?."
"விஜயோட வேட்டைக்காரன் படத்தை பாத்துட்டு நல்லா இருக்கு, சூப்பர்னு சொன்னானாம்."


டாக்டர் : என்னய்யா நம்ம ஆஸ்பத்திரில இவ்ளோ கூட்டம் ?.
கம்பவுண்டர் : விஜய் நடிச்ச வேட்டைக்காரன் படத்தைப் பாத்துட்டு எல்லாருக்கும் கண்ணு, காதுல இருந்து ரத்தமா வழியுதாம்.கொஞ்ச பேருக்கு வாந்தி பேதியும் இருக்குங்க.


அம்மா தன மகளிடம் : மகளே நீ உன்னோட பிரண்ட்சோட சேர்ந்து பார்க், பீச், ஹோட்டலுக்கு, கோயிலுக்குன்னு எங்க வேணும்னாலும் போ. தப்பி தவறி வேட்டைக்காரன் சினிமாவுக்கு மட்டும் போயிடாத.


"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

நண்பர் 1: என்னங்க வேட்டைக்காரன் விஜயோட நிலைமை இப்படி ஆயிடுச்சே ?.
நண்பர் 2: அது ஒன்னும் இல்லைங்க விஜய் வேற அரசியல்க்கு வராத சொல்லிட்டு  திரியாருல, அதனால வந்த வினைதான் இது. SUN pictures sketch போட்டு தூகறாங்க இவர. இன்னும் பொறுத்திருந்து பாருங்கல் என்னவெல்லாம் நடக்குதுன்னு...இவர இல்லாம பண்ண போறாங்க...! (உண்மையாக இருக்குமோ)

உங்க வாழ்க்கைல பொக்கிஷமா இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.

விஜயின் படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு வித்யாசம் தெரியும்,அதாவது படத்தின் பெயரில் மட்டும் வித்யாசமாக இருக்கும் மற்றபடி எல்லாம் ஒரேமாதறி தான் இருக்கும் இதுவும் அப்படிதான் இருக்கு, அனுஷ்காவை பார்க்க இந்த படத்திற்கு போகலாம்.

விஜய் : வேற வேற வேற வேற வேற வேற வேற ஒரு நல்ல படத்தை போய்  பாருங்கையா.
ரசிகர்கள்: ?????

திரையிக்கு வந்து சில மணி நேரங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம் "வேட்டைக்காரன்" திருட்டு வீ சீ டீ. ஆனாலும் ஒரு வீ சீ டீ கூட விக்கவில்லை.

"விஜயின் வேட்டைக்காரன் படம் பார்த்துவிட்டு வரும் மக்களுக்கு வாந்தி பேதி, மயக்கம், தலைசுற்றல் உள்ளான உடல் கோளாறுகள் ஏற்பட்டால்  உடனடியாக ஆங்காகே அமைந்திருக்கும் சிறப்பு மருத்துவ முகாமுக்கு சென்று சிகிச்சைப் பெற்று கொள்ளவும்". - தமிழக அரசு.

(சும்மா ஜோக்குக்குதாங்க)


Posted by போவாஸ் | at 11:44 PM

4 கருத்துக்கள்:

vaasudevan said...

nee kalakku chitthappu..

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

அனுஷ்க்காதான் படம் ஓட காரணம் என்பது உண்மை..!! எல்லா படத்தையும் போலத்தான் என்பது நிஜத்திலும் நிஜம்.. சன் பிக்சர்ஸின் “சதி” என்பது - உண்மைக்கெல்லாம் உண்மை.. அதுசரி உங்களுக்கு மட்டும் அரசாங்க “சதி” எப்படி தெரியுது..!!?

Jaleela said...

இப்ப ஓடதா படத்த எல்லாம் சன் பிக்சர்ஸுன்னு சன் டீவியில ஆட் கொடுத்துட்டா நல்ல ஓடுமுன்னு ஒரு நப்பாசை போல.

அட ஆஞ்சி ஓஞ்சி கொஞ்சம் நேரம் டீவி பார்க்கலாம் உட்கார்ந்தா, நிமிஷத்து நிமிடம்
நான் அடிச்சா தாங்க மாட்டே, நாலு மாதம் தூங்க மாட்டே என்று கொல்றாங்கபா.

Jaleela said...

உங்க வாழ்க்கைல பொக்கிஷமா இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்//

சபாஷ் ரொம்ப சரி

Post a Comment

Related Posts with Thumbnails