அஜால் குஜால்அஜால் : ஏம்பா,  விரைவில் கேபடன் டிவி, கேப்டன் முரசு வரப்போகிறது அதில் நான் 'பெரிய கொண்டை ஊசி' என்ற பெயரில் எழுதப் போகிறேன்"னு விஜயகாந்து சொல்லியிருக்காரே.


குஜால் : ஒரு அறிக்கையே தெளிவா தயார் பண்ணவே தெரியாது....இதுல இவராவது எழுதுராவது... இவர் சொல்றதப் பார்த்தா, அறிக்கைகளை மட்டும் எழுதித்தரும் பண்ரூட்டியாருக்கு கூடுதல் வேலை  கொடுத்திருக்காருன்னு மட்டும் தெரியுது.


காங்கிரஸ் எம்.எல்.ஏ., அருள் அன் பரசு: ஒன்றுபட்ட ரஷ்யா எப்படி இருந்தது; இன்று அதன் நிலைமை என்ன? அதுபோல எந்த நாட்டிற்கும் வரக் கூடாது. பிரிவினைவாதம் நாட்டிற்கு நல்லதல்ல.


குஜால் :  அட என்ன நீங்க ரஷியவேல்லாம் இழுக்குறீங்க. உங்க காக்கிராஸ் கட்சியப் பாருங்க. ஒண்ணா இருந்த காங்கிரஸ் கட்சி எப்படி இருந்துச்சு...இன்னைக்கு எப்படி இருக்கு ?.ஒண்ணா இருந்திருந்தா ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சியை அமைச்சிருக்கலாம்...அட்வைஸ் எல்லாம் மத்தவங்களுக்குதானே.

Posted by போவாஸ் | at 12:38 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails