முஸ்லிம்களையும், கலாச்சாரத்தையும் அவமதித்த விஜயகாந்த்


பொதுவாகவே அரசியலில் இருப்பவர்கள் ரம்ஜான் நோன்பு மாதங்களில் இது போன்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும் நடப்பதுதான்.

நம்ம கேப்டன் விஜயகாந்த் எப்பொழுதுமே கொஞ்சம் வித்தியாசம்.

ஆசை இல்லாத மனிதன் எவருமில்லை. ஆனால் பேராசை பேரு நஷ்டத்தை ஏற்படுத்தும். நம்ம விஜயகாந்த் இரண்டாவது ரகம்.

விஜயகாந்துக்கு இருக்குற சில் குணங்கள் என்னன்னா, தன்னைப் பற்றி, பத்திரிகையில் போட்டோ வரணும், செய்தி வரணும், அறிக்கைதரனும், லூசுத் தனமான கேள்விகள் கேட்டு அப்புறம் பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப் ஆகணும் இப்படி நிறைய இருக்கு.

எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தன் எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்வார். உப்பு சப்பு இல்லாத விஷயத்தையும் அரசியல் ஆக்க முயற்சிகள் செய்வார்.

சரி இது தெரிஞ்சதுதானே, இப்ப என்ன சொல்ல வரன்னு கேக்குறிங்களா?

கீழ இருக்குற படத்தைப் பாருங்க.

நேற்று நடந்த ஒரு இப்தார் நோன்பு விருந்தில் கலந்துகிட்ட போட்டோ.
தினமலர் இணையதளத்துல வெளியாகிவுள்ளது.

தொண்டர்கள் சூழ ஒய்யாரமாக உக்காந்து கஞ்சி குடிப்பது போல (ஒரு வேளை குடித்து இருக்கலாம், போடோவைப் பார்த்தல் குடிப்பது போல தெரியவில்லை)
போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

சுற்றி நிற்கும் எல்லோரும் தங்கள் தலையில் முஸ்லீம் மதத்திற்கும், மதிப்பிற்கும், அடையாளத்திற்கும், கலாச்சாரத்திகும் உரிய குல்லா வைத்துள்ளார்கள்.

ஆனால், விஜயகாந்தின் தலையைப் பாருங்கள், என்ன இருக்கிறது என்று ?.

இது எம்.ஜி.ஆர் அணியும் தொப்பியைப் போல் இருக்கிறது.
இவர் இப்தார் விருந்துக்கு போனாரா அல்லது நான் கருப்பு எம்.ஜி.ஆர்னு தலைல குல்லா வச்சிக்கிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்க போனாரா.

இவரது தொண்டர்கள் அழைப்பது போல கருப்பு எம்.ஜி.ஆரவே இருக்கட்டும்...அதற்காக இப்படி ஒரு வேஷம் கட்டுவதா ?

பின்னால் பாருங்கள்...தே.மு.தி. கட்சிக் கொடியினை.

இது என்ன முஸ்லிம்களின் இப்தார் விருந்தா அல்லது கட்சியை வளர்க்க, மக்கள் மனதில் இடம்பிடிக்க நாடக மேடையா ?

ஒன்று முஸ்லீம் நண்பர்களைப் போன்று குல்லா வைத்திருக்கலாம், அல்லது வைக்காமலேயே இருந்திருக்கலாம்.

இவர் முஸ்லீம் நண்பர்களையும், கட்சியினரையும், மக்களையும், இனத்தையும் தகுந்த மரியாதையுடன் மதிக்கிறார் என்றால் இப்படி ஒரு குல்லாவைத் தன் தலையில் வைத்திருப்பாரா ?

முஸ்லீம் மதத்திற்கும், இனத்திற்கும் விஜயகாந்த் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா?

இந்து மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் விட மிக மிக கட்டு கோப்பான மதம் முஸ்லீம் மதம் என்று படித்திருக்கிறோம். அவர்கள் தங்களது கொள்கையிலும், கலாச்சார பழக்கவழக்கங்களையும் மிக நேர்த்தியாக, பயபக்தியுடன் கண்டிப்புடன் பின்பற்றி வருகிறவர்கள்.

அப்படிப்பட்ட முஸ்லீம் மதத்தின் இப்தார் விருந்துக்கு சென்ற விஜயகாந்த், இது போன்று வழக்கத்திற்கு மாறாக நடப்பது சரிதானா ?

இந்த லட்சணத்தில் சென்ற இதை போல நடந்த ஒரு இப்தார் நோன்பு விருந்தில் விஜயகாந்துக்கு விஜய்கான் என புதிய பெயர் இப்தார் விருந்தில் முஸ்லிம்கள் புதிய ஒஎயர் வைத்தனர். (sep 30 2008, triplicane, chennai)
சரி என்றால், முஸ்லீம் மக்கள் அனைவரும் விதம் விதமாக, கலர் கலராக குல்லா என்ற தொப்பியை வைத்துக் கொள்ளலாமே. முடியுமா ?

இதில் வெக்கக் கேடான விஷயம் என்ன வென்றால், இவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் எல்லாம், கொஞ்சம் கூட கவலைப்படாமல், கலாச்சாரத்தின் மேல் அக்கறையில்லாமல், விஜயகாந்துடன் போடோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை என்ன வென்று சொல்வது.

ஒரு வேளை...இந்த முஸ்லீம் நண்பர்கள் தாங்கள் வணங்கும், வழிபடும் 'அல்லா', விஜயகாந்தாக மறுவடிவம் எடுத்து வந்துள்ளார் என்று நினைக்கிறார்களோ என்னவோ.

இது உண்மை முஸ்லிம்களின் இப்தார் விருந்தல்ல...விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று காட்டிக் கொள்ள தன் சகாக்களுடன் நடத்திய நாடக மேடை என்றே சொல்ல வேண்டும்.

விஜயகாந்த் நல்ல நடிகர் என்று அவருடன் இருப்பவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

சொல்லிருக்கும், செயல் இருக்காது - இதுதான் விஜயகாந்த்.

"சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை" என்பது பழமொழி.

Posted by போவாஸ் | at 11:24 PM

5 கருத்துக்கள்:

Anonymous said...

மிகவும் சரி... விஜயகான் மதுரைல போட்டியிடனும்..... அப்ப தெரியும் இவர் பப்பு....

அஹோரி said...

கருத்து சுதந்திரத்துல தீய வைக்க.

Anonymous said...

yei enna ninaihukitturukka?
hm enaakku pakisthaan theeviravathinganaalum pudikaathu avunga podura kullayum pudikkathu. un karuthu sudahndirakthila theeya vaikka matten ore kuthu thaan hm .
(Summa damshukku)

Anonymous said...

ஐயா பெரியவரே ஒரு முஸ்லிம் என்பவன் கண்ணியம் மிக்கவணாக தான் இருக்க வேண்டும் தொப்பி போட்டதால் அல்ல நிச்சயமாக விஜயகாந்த் ஒரு கண்னியம் மிக்க மணிதரே.

Anonymous said...

இந்த பதிவுக்கு ஓட்டு போட்டவனெல்லாம் போய் மனநல மருத்துவர பாருங்கடா.

Post a Comment

Related Posts with Thumbnails