விருதுக்கு மரியாதை தர தெரியாத தரமற்றவர்கள்


நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் பேசி வருவதை மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி, அந்த விருதை திரும்பப் பெற வேண்டுகோள் விடுப்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை சினிமா பிரஸ் கிளப் நிறைவேற்றியுள்ளது.
சினிமா பிரஸ் கிளப் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ராவணன், தலைவர் சக்திவேல் தலைமையிலும், பொதுச்செயலாளர் எம்.பி.ஆபிரகாம் லிங்கன் முன்னிலையிலும் நடைபெற்றது.
திரையுலகினால் கடுமையான அவமரியாதைக்கு உட்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களின் உணர்வுகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
1. நாளிதழ் ஒன்றில் திரையுலகினர் பற்றி வந்த செய்தியால் திரையுலகினர் குறிப்பாக சம்மந்தப்பட்ட நடிகைகள் மன வருத்தத்தை சினிமா பிரஸ் கிளப் புரிந்து கொள்கிறது. இதுதொடர்பாக 7.10.09 அன்று நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் திரையுலகில் மதிப்பு மிக்க இடத்தில் இருக்கும் சத்யராஜ், சூர்யா, விவேக், சேரன் ஆகியோர் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் இழிவு படுத்தி பேசியது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு சினிமா பிரஸ் கிளப் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
2. எங்கள் உறுப்பினர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இனி நடைபெறும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் சம்மந்தப்பட்டவர்கள் தரும் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்வதில்லை என சங்கம் தீர்மானித்துள்ளது.
3. பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய விவேக், சேரன், சூர்யா, சத்யராஜ் ஆகியோர் தொடர்பான செய்திகள் புறக்கணிப்பது தொடர்பாக அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும், உரிமையாளர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைப்பது.
4. இந்த பிரச்சனை தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் சென்னை பிரஸ் கிளப், சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர் கூட்டுக்குழு நடவடிக்கைகளுக்கு சினிமா பிரஸ் கிளப் முழு ஆதரவு தெரிவிக்கிறது.
5. நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும்,அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றோர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி, அந்த விருதை திரும்பப் பெற வேண்டுகோள் வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவரா விவேக் ?
பத்மஸ்ரீ விருது கிடைத்தவுடன் திரு.விவேக் அவர்களின் பேட்டி ஒரு நாளிதழில் வெளியானது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி.


மிகச் சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களான என்எஸ்கே மற்றும் நாகேஷுக்கே வழங்கப்படாத பத்மஸ்ரீ விருது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே… படத்துக்குப் படம் ஆபாச வசனங்கள் அதிகம் பேசும் நீங்கள் இதற்குத் தகுதியானவர்தானா?’, என விவேக்கிடம் கேள்வி எழுப்பியதால் கடுப்பானார் விவேக்.
டெல்லியி்ல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பத்மஸ்ரீ விருது பெற்றுத் திரும்பிய நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அவரது ரசிகர்கள் மூலம் மிகப் பெரிய வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று சில நிருபர்களைச் சந்தித்து தனது பத்மஸ்ரீ அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
தமிழின் உன்னதமான நகைச்சுவைக் கலைஞர்களான என்எஸ்கே, நாகேஷ் போன்றவர்களுக்குக் கூட கிடைக்காத பத்மஸ்ரீ விருது உங்களுக்குக் கிடைத்துள்ளது. படத்துக்குப் படம் ஆபாச வசனங்கள் பேசும் நீங்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்தானா என்று கேட்டதற்கு, “என்எஸ் கிருஷ்ணன் காலத்தில் பத்மஸ்ரீ வி்ருது வழங்கப்படவில்லை. நாகேஷ் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு விருது கொடுக்காதது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை”, என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: “27 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். பல சமூக சீர்திருத்த கருத்துக்களைக் கூறி வந்திருக்கிறேன். குடும்பநல திட்டம், பெண் சிசு கொலை, குழந்தைகள் கல்வி, வரதட்சணை ஒழிப்பு, போலியோ மருந்தின் அவசியம், போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகிய கருத்துக்களை நான் நடித்த படங்களின் மூலம் சொல்லியிருக்கிறேன். படத்தில் நாத்திகம் பேசினாலும் நான் ஒரு ஆன்மிகவாதி. கண்டிப்பாக நாத்திகன் அல்ல. ஆன்மிகத்தில் உள்ள சில மூடப்பழக்க வழக்கங்களை படங்களில் எடுத்து சொல்கிறேன், அவ்வளவுதான். என் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்லத்தான் இப்போது கதாநாயகனாக நடிக்க விரும்புகிறேன். நான் சாமியாராகப் போவதாக சிலர் கேட்டிருந்தார்கள். நிச்சயமாக நான் சாமியார் ஆகமாட்டேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் உண்மை என ஒன்று இருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாழ்ந்து முடித்த பின், பெரும் உண்மையை தேடி போகவேண்டும் என்ற ஆசை சிலருக்கு ஏற்படுவது உண்டு. அது எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சாமியார் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை…”, என்றார்.
வடிவேலுவின் நகைச்சுவை மாதிரி சுவாரஸ்யமாக உங்கள் நடிப்பு இல்லையே… திரும்ப திரும்ப ஒரே மாதிரிதானே நடிக்கிறீர்கள். படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறீர்கள், என்று கேட்டபோது கடுப்பான விவேக், “சில பிரசாரங்கள் ‘போர்’ அடிக்கத்தான் செய்யும். கசப்பு மருந்துக்குள் இனிப்பு கலப்பதைபோல் சொல்லவேண்டும். சுருளிராஜனின் நகைச்சுவையைகூட விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள். இன்னொருவரின் பெயரை சொன்னீர்களே அவரைப்போல் நான் ஏன் நடிக்க வேண்டும்?”, என்றார் காட்டமாக.

தகுதியில்லாத, தரமில்லாத, பொது வாழ்க்கையில் தூய்மை, நேர்மை,  மற்றோருக்கு முன் உதாரணமாக இல்லாத, கலாச்சாரத்தை சீரழிக்கும் இவரைப் போன்ற சிலருக்கு பத்மஸ்ரீ, பத்மா பூசன் உள்ளிட்ட உயரிய வழங்கப் படுகிறது.முதலில் அதை நிறுத்த வேண்டும். விருதுக்கு தேர்வுக்கு செய்யும் குழு சிறப்பான குழுவாக இருக்க வேண்டும். அதுவே ஒழுங்கு கிடையாது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். ஒழுங்கில்லாத குழு ஒழுங்கில்லாதவர்களைய்யே தேர்ந்தெடுக்கும்.

உள்நாட்டில் 6 Doctorate, வெளிநாட்டில் 2 Doctorate, 3 National Award, மேஸ்ட்ரோ இசைக்காக Royal Philharmonic என்ற உயரிய விருது, இன்னும் பல Honour Awards பெற்ற இசைஞானி இளையராஜா போல பல துறைகளில் இருப்பவர்களுக்கு கொடுக்காமல், நடிப்பிலும்  சரி, பொதுவாழ்க்கையிலும் சரி ஆபாசப் பேச்சுக்களைப் பேசும் நடிகருக்கும், அவுத்து போட்டு நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் போன்றோருக்கும் கொடுத்தால் இப்படித்தான்.


இவர்களால் விருதுக்கு ஒரு சதவீதம் கூட மரியாதை தர தெரியாத தரமற்றவர்கள். திரு.விவேக்கிடமிருந்து விருதைத் திரும்பப் பெற வேண்டும். இது அவருக்கும், இவரைப் போன்று இருப்பவர்களுக்கும், விருதைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும்.

Posted by போவாஸ் | at 12:55 PM

6 கருத்துக்கள்:

djகுரூஸ் said...
This comment has been removed by the author.
djகுரூஸ் said...

நீங்கள் எதனை மனதில் வைத்து இந்த கட்டுரையை வரைந்தீர்களோ தெரியாது!!!
ஒரு மனிதன் கோபத்தில் சில தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது வழமை.
நீங்கள் கோபப்படுவது இல்லையா?
தமிழ் சினிமாவில் புது விதமான நகைச்சுவைகளையும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரசாரங்களையும் மேற்கொண்டதற்காகவே இந்த விருது வழங்கப்பட்டது. அவரது சிறந்த பக்கங்களை பார்க்காது எதிர்மறையாக பார்ப்பது கனியிருக்கும் போது காயை விரும்புவதுக்கு சமன்.

போவாஸ் said...

dj குரூஸ் அவர்களுக்கு: மனிதனுக்கு கோபம் வருவதும், கோபத்தில் வாயிலிருந்து தடித்த வார்த்தைகள் வருவதும் இயற்கையே.விவேக் விசயத்தில் அப்படியில்லை. அவர் ஒரு நல்ல கார்டூனிஸ்ட், ஜோக் எழுதுபவர், காமெடி கதைகளையும் எழுதுபவர், சினிமாவிலும் பல பல சமுதாய சீர்திருத்த கருத்துக்களைச் சொல்லி நடிக்கிரவருக்கு சபை நாகரீகம், மரியாதை, எங்கே எப்படி பேசவேண்டும் என்பது தெரியவில்லையா...? சாதாரணமான மனிதன் பேசினால் சீரியாசாகாது.விவேக் பேசியவை இவ்வளவு சீரியஸாக காரணம் என்ன?. அவரை பெரிய ஆளாய் எல்லோரும் பார்ப்பதால்தான். பெரிய மனுஷன் பெரிய மனுஷன் மாதிரி நடந்துகொனும். தரம் தாழ்ந்து நடந்துகிட்டா..ஒரு பய மதிக்க மாட்டான்.

Anonymous said...

பத்திரிக்கை காரன் என்ன வேண்டுமானாலும் எழுதுவான் ! அதே பாங்கில் பதில் கொடுத்தால் தவறா?

Anonymous said...

Ithuvarai Aduthavan kudubathai pathi kathai kattum pothu valikatha Ungal neajam, ipo unga kudbathai pathi pesunathan valikuthuna, I support vivek for criticizing some useless journalist for futile work for the field of journalism and the society as a whole. Please do not think general public will always behind you
Anandh Canada

Anonymous said...

By the by thanks for keeping your comment section open because some of your friends kept it closed and want see what they want.

Post a Comment

Related Posts with Thumbnails