அமெரிக்க வங்கி திவால் - சோகத்தில் தமிழகத் தலைவர்
அமெரிக்காவில் திவாலான மூன்று வங்கிகளில் தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பல கோடி டாலர் பணம் முடங்கி விட்டதாகவும், இந்த சோகம் காரணமாகவே பரபரப்பாக உலாவரும் அவர் இப்போது பம்மிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வரிசையாக அந்நாட்டு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இந்த ஒரு ஆண்டில் மட்டுமே இதுவரை 123 வங்கிகள் திவாலாகின. அவற்றை அமேரிக்கா காப்பீட்டுத் துறை ஏற்றுள்ளது.
இந்நிலையில் இந்த திவாலான வங்கிகள் மூன்றில், தமிழ்நாட்டின் பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவரது பெரும் பணம் டெபாஸிட் செய்யப்பட்டதாம்.
இந்தப் பணம் தேர்தல் நிதியாக பெரும் தொழிலதிபர்களிடமும், கூட்டணி பேரத்திலும் திரட்டப்பட்டதாம்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்தத் தலைவர் டெபாஸிட் செய்த வங்கிகள் மூன்றுமே திவாலாகி, மூடப்பட்டு விட்டனவாம்.
இந்த விவரம் தெரியவந்ததும் ஆடிப்போன தலைவர், அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் விட்டாராம். சில விவரமான கைத்தடிகள், 'அண்ணே கலங்காதீங்க... இன்சூரன்ஸ்ல பணம் கெடச்சிடும்' என்றும், இன்னும் சிலர், 'குறிப்பிட்ட அளவுதாண்ணே கிடைக்கும் முழுசா கிடைக்காது' என்றும் மாற்றி மாற்றி சொல்லி வருவதால், வெறுத்துப் போய் யாரையும் பார்க்கக் கூட மறுத்து விட்டாராம்.
கூட்டணி, தேர்தல் என்று யாராவது தேடி வந்தாலும், அப்புறம் பார்க்கலாம் போங்கய்யா என்கிறாராம்.
ரொம்ப பெரிய தொகையாத்தான் கோட்டை விட்டிருக்காரு!
யாருப்பா அந்த தலிவரு ?. விஜயகாந்தா ? வைக்கோவா ? ராமடாசா ?
ஏன் மனசுக்கு விஜயகாந்துதான்னு தோணுது. அவருதான், தேர்தல் நேரத்துல ஒரு பெரிய தொகையை காங்கிரஸ் கிட்டயிருந்து வாங்குனாருன்னு ஊருக்குள்ளார பேசிக்கிறாங்க. அவர்தான் திரைமறைவுல பெகப் பெரிய பேரம் பேசியதாகவும் சொல்றாங்க.
அது மட்டுமல்லாம, வைகோ அவர்கள் எப்பொழுது போல அறிக்கைகளும், அது இதுன்னு எதாவது பண்ணிக்கிட்டு இருக்கார். யாரும் கேக்குராங்களோ, கேக்கலையோ, படிக்கிறாங்களோ படிக்கலையோ அறிக்கை மட்டும் தொடர்ந்து கொடுத்துகிட்டே இருக்காரு நம்ம பாமக ராமதாசும். விஜயகாந்து மட்டும்தான் கடந்த இரு வாரமா எந்த அறிக்கை விடாம இருந்தாரு. திடிர்னு போன வாரம் மழையினால் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு பத்தி அறிக்கை விட்டாரு. அப்புறம் காணோம்.
So, அந்த தமிழகத் தலைவர் விஜயகாந்துதான்னு நான் நினைக்கிறேன்.
நீங்க என்ன சொல்றீங்க ?.
0 கருத்துக்கள்:
Post a Comment