சென்னை சாலைகளை ஆக்கிரமித்து 3000 கோயில்கள்


பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததுடன், இந்த ஆணையை மத்திய மாநில அரசுகள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களிலிருந்து சென்னை-யின் பெரும்பாலான சாலைகள் மற்றும் தெருக்கள் நடைபாதைக் கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை மாநகரில் குறைந்தது 3,000 கோயில்களாவது இவ்வாறு சாலைகளையும், தெருக்களையும் ஆக்ரமித்துக் கட்டப்பட்டுள்ளன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சாலையில் போக்குவரத்துக்கும், மக்களின் நடமாட்டத்திற்கும் பெரும் இடையூறாக இருக்கும் இந்தக் கோயில்களில் பெரும்பாலானவை பல பத்தாண்டு காலமாக இருந்து வருகின்றன என்று டிராபிக் ராமசாமி கூறுகிறார்.
இவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சென்னை மாநகரின் 2 மற்றும் 4 ஆவது வட்டங்களில் உள்ள சாலைக் கோயில்களைப் பற்றிய பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 2வது வட்டத்தில் மட்டும் 500 சதுர மீட்டர் அளவு சாலைகள் இத்தகைய கோயில்களால் ஆக்கிரமிகப்பட்டு உள்ளது. மக்கள் நெருக்கடி மிகுந்த வியாசர்பாடியில் மட்டும் இது போன்ற 95 கோயில்கள் பொது இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ளன.

மின் இணைப்புகள் கொடுத்தது எப்படி?

இத்தகைய சாலைக் கோயில்களில் பெரும்பாலானவற்றிற்குச் சட்டப்படியான மின் இணைப்பு தரப்பட்டிருப்பதும், வங்கிக் கணக்குகள் அந்தக் கோயில்களின் பெயர்களில் இருப்பதும் வியப்பையே அளிக்கிறது. அதிகார பூர்வமற்ற இத்தகைய சாலை ஆக்கிரமிப்புக் கோயில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது சட்டப்படி சரியானதுதானா என தகவல் அறியும் உரிமை சட்டத்-தின் கீழ் கேட்கப்பட்டபோது, நீண்ட காலத்திற்கு முன்பே இக் கோயில்களுக்கு உரிய இணைப்புக் கட்டணம் செலுத்தப்பட்டு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Posted by போவாஸ் | at 7:57 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails