விஜய் படத்துக்கு ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு
விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை புறக்கணிப்போம் என புலம்பெயர் ஈழத் தமிழர்கள் இமெயில் மற்றும் துண்டு அறிக்கைகள் மூலம் உலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஈழப் போருக்கு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நேரடியாக உதவி செய்ததை இலங்கை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இது தெரிந்தும் ராகுல் காந்தியை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசித்தார் விஜய்.
வெளியே ஈழத் தமிழருக்கு ஆதரவு போல் காட்டிவிட்டு, ராகுல் காந்தியை சந்தித்து அரசியல் பேரம் பேசிய விஜய்யின் படங்களை ஆதரிப்பதில்லை என அப்போதே ஈழத் தமிழர்கள் வெளிப்படையாக அறிவித்தனர்.
வரும் பதினெட்டாம் தேதி வேட்டைக்காரன் வெளியாக இருக்கும் நிலையில் தங்களது எதிர்ப்பை வலுவாக காட்டி வருகிறார்கள் ஈழச் சகோதரர்கள்.
மேலும், போர் நேரத்தில் சிங்களப் பேரினவாதிகளுக்கு உற்சாகமூட்டும் பாடல்களை புனைந்தளித்தவன், ராஜ்வீரரத்னே என்ற சிங்களவன். அவனுடன் இணைந்து பணிபுரியும் விஜய் ஆண்டனிதான் வேட்டைக்காரன் படத்துக்கு இசையமைத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கள பாடல்களின் டியூனை வேட்டைக்காரன் படப் பாடல்களில் பயன்படுத்தி தமிழர்களை அவமானப்படுத்தியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலே உள்ள காரணங்களால் வேட்டைக்காரன் படத்தை புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
-------------------------------------------
புலம்பெயர் ஈழத் தமிழர்கள் அழைப்பினை ஏற்று,
தமிழகத்தில்
வைகோ,
நெடுமாறன்,
சீமான்,
ராமதாஸ் குரூப்ஸும்,
இன்னபிற
ஜால்ரா குரூப்ஸும்
என்ன செய்யப் போகின்றார்கள்.
தமது தொண்டர்களிடம்,
விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை
புறகணிக்க சொல்வார்களா ?
அப்படி சொல்ல தைரியம் தான் இருக்கிறதா?
ஈழத் தமிழர்களுக்காக குய்யோ முறையோ
என்று
கூட்டத்தை கூட்டி,
கூப்பாடு போட்டு,
வானத்தைப் பிளக்கும் அளவுக்கு,
வாய் கிழியப் பேசும் இவர்களும்,
இவர்கள் பின்னால்
சுற்றித் திரியும் கூட்டமும்
என்ன செய்யப் போகிறார்கள் ?.
ஈழத் தமிழர்களின் மேல் உண்மை அக்கறை இருந்திருந்தால், இருக்குமானால், புலம்பெயர் தமிழர்களுக்கு இவர்கள் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். பேச்சோடு இல்லாமால் செயலில் காட்டியிருக்க வேண்டும். ஆனால் இங்கோ நிலைமை தலைகீழ்.
இவர்கள் விஜயின் வேட்டைக்காரன் படத்தினைப் புறக்கணிப்பார்களா ?
கட் அவுட்டுக்கு பால் ஊத்தி கொண்டாடப் போகிறார்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
இல்லை, இதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு, வழக்கம்போல் கலைஞர் அவர்களை தமிழின துரோகி என்று கூப்பாடு போட்டு உளறிக் கொண்டு , நாட்களைக் கடத்திக் கொண்டு ஆதாயம் தேடப் போகிறார்களா ?.
உண்மைத் தமிழர்கள் உணரவேண்டும்.
1 கருத்துக்கள்:
பிரபாகரனை இந்திய ராணுவத்தை அனுப்பி பிடிக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று நாக்கூசாமல் அழைக்கும் இவர்களிடம் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியாது. வேண்டுமானால் இதை வெளியிட்ட சன் டிவி மேல் பாய்வார்கள்.
Post a Comment