விஜய் டி.வி அழைப்பு கமல் மீண்டும் சம்மதம்!


கலைஞானி கமல்ஹாசனுக்கு விழா எடுத்து கவுரவித்தது விஜய் டி.வி. ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் கலந்து கொண்ட இந்த விழா, சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்தது. தமிழ் திரையுலகில் நடிக்க வந்து ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்த கமலுக்கு பொன்விழா நடத்திய விஜய் டிவி, அதன் மூலம் தனது உயரத்தை இன்னும் சில அங்குலம் வளர்த்துக் கொண்டது.

'காலங்களில் அவள் வசந்தம் மாதிரி, கலைகளில் அவர் கமல்ஹாசன்' என்ற பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த விஜய் டிவிக்கு கைமாறாக ஏதாவது செய்து தனது நன்றியை தெரிவிக்க நினைத்தாராம் கமல். "என்ன வேணுமோ கேளுங்க...?" என்று அவர் சொல்ல, விஜய் டி.வி கேட்டதுதான் விசேஷம்!


"நீங்களே பங்குபெரும் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். அதில் உங்களின் முழுமையான பங்களிப்பு வேண்டும்" இதுதான் விஜய் டி.வி கேட்ட விஷயம். அதாவது இந்தியில் அமிதாப் செய்தாரே கோடீஸ்வரன் நிகழ்ச்சி! அது மாதிரி ஒரு ஷோ. முதலில் யோசித்த கமல், தற்போது அதற்கும் ஓ.கே சொல்லியிருக்கிறாராம்.


நடிகர்களில் உலக ஞானம் பெற்றவர் கமல் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்போது அவர் நடத்தப் போகும் ஷோ, அதை இன்னும் தெளிவுபடுத்தும் என்பது மட்டும் நிச்சயம்!

Posted by போவாஸ் | at 9:00 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails