உடல் எடையை குறைக்கும் குடை மிளகாய் கேப்சூல்
குடை மிளகாயை உணவுப்பொருள் என்பதை விட ஒரு சிறந்த மருத்துவப் பொருள் என்றே கூற வேண்டும் என்கின்றனர் பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகள்.
அதற்கு காரணம், குடை மிளகாயையும், மிளகையும் சேர்த்து மாத்திரை தயாரித்துள்ளனர். கேப்சூல் வடிவிலான அந்த மாத்திரைக்கு உடல் எடையை குறைக்கும் மகிமை உண்டு என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் தயாரித்துள்ள மாத்திரையின் பெயர் கேப்ஸி ப்ளெக்ஸ். இந்த மாத்திரை குறித்து பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது:-
கேபஸி ப்ளெக்ஸ் மாத்திரையை குண்டாக இருக்கும் ஒருவர் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் அவரது உடலில் அதிகப்படியாக சேமித்து வைக்கப்பட்டுள்ள சக்தி படிப்படியாக குறையும். ஒருவர் 80 நிமிடம் நடந்தால் எவ்வளவு சக்தியை இழப்பாரோ அந்த அளவுக்கு சக்தியை ஒரு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் குறைந்துவிடும்.
பொதுவாக நமது உடலில் வளர்சிதை மாற்றம் அதிகமாக நடக்கும் போது சக்தி கணிசமாக குறைகிறது. இதனால் உடல் எடையும் குறையும். இதன் அடிப்படையில்தான் மாத்திரையை தயாரித்துள்ளோம்.
வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை துரிதப்படுத்தும் வல்லமை மிளகுக்கும், குடை மிளகாய்க்கும் இயற்கையாகவே உண்டு. அந்த விதத்தில் மிளகையும், குடை மிளகாயையும் மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள மாத்திரையை சாப்பிடுவதன் மூலம் குண்டாக உள்ளவர்கள் கணிசமான எடை இழப்பு அடைகின்றனர்.
இந்த மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் குண்டாக உள்ளவர்கள் மெலிந்து பார்ப்பதற்கு அழகாக மாறிவிடுவர். இந்த மாத்திரை தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அது முடிந்ததும் சந்தைக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
0 கருத்துக்கள்:
Post a Comment